Tum Tum பாடலுக்கு அமீருடன் இணைந்து நடனம் ஆடிய பாவனி.. விரைவில் வெளியிடப்படுகிறது.. | Amir Pavni Dance

பிக் பாஸ் சீசன் 5-ன் இறுதி போட்டியாளர்களுள் ஒருவர் தான் பாவ்னி! விஜய் டிவியில் சின்னதம்பி சீரியலில் ஆரம்பித்த இவர் சினிமாவிலும் பணிபுரிய ஆசைப்பட்டு அதற்கு முயற்சி செய்யும் பொழுதே பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற இவருக்கு வாய்ப்புகள் வந்ததாக சொல்லப்படுகிறது. இது மட்டுமில்லாமல் சீரியலில் இவர் நடித்தபோதிலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே.

Tum Tum பாடலுக்கு அமீருடன் இணைந்து நடனம் ஆடிய பாவனி.. விரைவில் வெளியிடப்படுகிறது.. | Amir Pavni Dance 1

விளம்பரம்

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அதிக சீரியல்களில் நடித்தவர். மலையாளம், மற்றும் ஹிந்தியிலும் ஒரு சில சீரியல்கள் மற்றும் படங்கள் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் ஒரு கடுமையான போட்டியாளர் என்றே கூறலாம். இவருடன் நட்பு பாராட்டிய ஒவ்வொரு போட்டியாளரும் வீட்டை விட்டு வெளியேறினாலும் பலரின் ஆதரவோடு பிக் பாஸ் வீட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும், பிக் பாஸ் வீட்டிலும் இவர் சந்திக்காத மன உளைச்சலே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும்! Youtube Video Embed Code Credits: Galatta

Tum Tum பாடலுக்கு அமீருடன் இணைந்து நடனம் ஆடிய பாவனி.. விரைவில் வெளியிடப்படுகிறது.. | Amir Pavni Dance 2

விளம்பரம்

இவரிடம் வைல்ட் கார்டு என்ட்ரியாக வந்த அமீர் காதலிப்பது போன்ற விளையாட்டை நடத்தினார். ஆனால் பாவனி தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை. நாங்கள் இருவரும் நண்பர்கள்தான் என்ற பதிலுடன் முடித்து கொண்டனர். அவர்கள் சமீபத்தில் ஒரு youtube சேனலில் கொடுத்த பேட்டி வைரல் ஆனது. தற்போது அவர்கள் இருவரும் இணைந்து Tum Tum பாடலுக்கு நடனம் ஆடினர். அந்த பாடல் இன்றைக்கு வெளிவருவதாக இருந்தது. அனால் சில காரணங்களால் இன்றைக்கு வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. விரைவில் அந்த பாடல் வெளியிப்படும் என்று சம்மந்தப்பட்ட youtube சேனல் அறிவித்துள்ளது..அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video..

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment