The Indian Times

காதலியை கரம் பிடித்தார் வானத்தை போல சீரியல் ராஜபாண்டி.. திருமணத்தின் புகைப்படங்கள்

நாடகங்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி சன் தொலைக்காட்சி.அதன் பின்னர் தான் பிற தொலைக்காட்சிகள் எல்லாம்.என்று சொல்லு அளவிற்கு குடும்பத்தரசிகளின் மனதினை கொள்ளை கொண்டுவிட்டது சன் டிவி.

பல தொடர்களை களம் இறக்கி மக்களை மகிழ்வித்து வருகிறது.வாரத்தில் 5 நாட்களும் காலையும் மாலையும் தவறாமல் பல நாடகங்களை கொடுத்து இல்லத்தரசிகளை தங்கள் வசம் வைத்துள்ளது.

ஹிட் அடித்த நாடகங்கள் என்று கூறினால் அதில் 100க்கு 99 நாடகங்கள் சன் தொலைக்காட்சியில் உள்ள நாடகங்களாக தான் இருக்க வேண்டும்.

அந்த அளவிற்கு நாடகங்களை வரிசையாக களம் இறக்கி வைத்துள்ளது. அப்படி சன் தொலைக்காட்சியில் உள்ள பிரபலமான சீரியல்களில் ஒன்று தான் வானத்தை போல சீரியல்.

Advertisement

இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் அஸ்வந்த் கார்த்தி,இந்த தொடரின் மூலம் பல ரசிகர்களையும் கவர்ந்து இருக்கிறார்.

சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தவர் இவர்.பின்னர் வரிசையாக பிரியமானவள், குலதெய்வம், கல்யாணம் முதல் காதல் வரை ,அரண்மனைக்கிளி, ரெக்க கட்டி பறக்குது மனசு என்று தொடர்களில் நடித்து கலக்கினார்

தற்போது வானத்தை போல சீரியலில் நடித்து வருகிறார்.

Advertisement

இவர் காதலித்து வந்த பெண்ணுடன் இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in