The Indian Times

பவித்ராவின் வெளியேற்றத்தால் சோகத்திற்குள்ளான ரசிகர்கள்! குக்கு வித் கோமாளி சென்ற வார எபிசோட்.

விஜய் டிவியின் அனைவரும் ரசித்து பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருப்பது குக்கு வித் கோமாளி. சிறியவர் முதல் பெரியவர் வரை ரசித்து பார்க்கும் விதமாக சிறந்த பொழுது போக்கு நிகழ்ச்சியாக இருப்பது இந்த குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி. வார வாரம் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி வலியுறு குலுங்க சிரிக்க வைக்கும் அளவிற்கு சேட்டைகள் நிறைந்த நிகழ்ச்சியாக இருக்கும் . இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற கோமாளிகளுக்கும் சரி குக்குகளுக்கும் சரி ஏராளமான ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக விளங்குவது புகழின் மற்றும் சிவாங்கியின் சேட்டை , பாலாவின் மொக்க கவுண்ட்டர் என சொல்லி கொண்டே போகலாம்.

Advertisement

எல்லா வாரமும் வைறுகுலுங்க சிரிக்க வைத்த நிகழ்ச்சி, சென்ற வாரத்தின் எப்பிசோட் கண்கலங்க வைத்து விட்டது என்றே கூறலாம். இந்த வாரம் எலிமினேஷன் வாரம் என்பதால் யார் வெளியேற போவது என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது. இத்தாவரத்தில் ஷகிலா, அஸ்வின் , பவித்ரா, கனி என்ற 4 குக்குகளுக்கு இடையே போட்டி நடந்தது. இதில் எலிமினேஷன் ரௌண்டில் மாட்டிக்கொண்டது அஸ்வின் மற்றும் பவித்ரா. சும்மாவே அஸ்வின் சூப்பராக சமைப்பார் என்று அனைவர்க்கும் தெரியும் , இதில் வீக்கெஸ்ட் கண்டெஸ்ட்டண்ட் என்றாலே பவித்ரா தன் என்பது அனைவர்க்கும் தெரியும்.

இருந்தாலும் அஸ்வினிற்கு ஈடு கொடுத்த பவித்ரா, போட்டியை விட்டு வெளியேற கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. இது பவித்திரா ரசிகர்களை மிகவும் சோகத்திற்குள்ளாக்கியது. இருப்பினும் கடைசியில் பவித்ரா பேசியது அனைவரது மனதையும் உறுக்கிவிட்டது என்பது தான் உண்மை. தான் இந்த நிகழ்ச்சியில் பெற்ற புகழ் அனைத்துமே புகழுக்கு மட்டுமே என்று கூறியது புகழ் ரசிகர்களை மிகவும் பெருமைப் பட வைத்தது.

தனது வெற்றிக்கு அடுத்தவர் காரணம் என்று கூறுவதற்கெல்லாம் பெரிய மனசு வேண்டும். இந்த மனசுக்காகவே நீங்கள் பெரிய உயரத்தை அடைய வேண்டும் என்று கண்களில் கண்ணீர் தெம்ப புகழ் பவித்ராவுக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in