The Indian Times

ஹேர் ஸ்டைலை மாற்றி புதிய கெட்டப்பில் சினேகா..! வேற லெவல் transformation…

திரைத்துறையில் எத்தனை ஜோடிகள் இருந்தாலும் நமக்கு மிகவும் பிடித்த ஜோடி என்று சிலரை தான் சொல்ல முடியும். அந்த வரிசையில் எல்லாருக்கும் பிடித்த ஜோடி சினேகா – பிரசன்னா. தமிழை தாய் மொழியாக கொண்ட சினேகா “இங்கே ஒரு நீலப்பக்ஷி” என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். 2001 ஆம் ஆண்டு “என்னவளே திரைப்படம்” மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

Advertisement

பிறகு ஆனந்தம் , புன்னகை தேசம் , உன்னை நினைத்து என்று பல வெற்றிப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென நிரந்தரமான இடத்தை பிடித்தார் சினேகா. அதன் பிறகு 2009-ம் ஆண்டு அச்சமுண்டு-அச்சமுண்டு படத்தில் நடித்து வந்த போது, சினேகா-பிரசன்னா ஜோடிக்கு நடுவே காதல் மலர்ந்தது. ஆரம்பத்தில் கிசுகிசு என மறுத்தவர்கள் 2011-ம் ஆண்டு தங்கள் காதலை ஊரறிய ஒப்புக்கொண்டனர். 2012ம் ஆண்டு இந்த காதல் ஜோடிக்கு திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் இணைந்து சில படங்களும் நடித்து உள்ளனர். Youtube Video Embed Code Credits: Behindwoods TV

Advertisement

திருமணத்திற்கு பிறகு சில படங்களில் கதாநாயகியாகவும் , சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தார் சினேகா. இவர் இறுதியாக நடித்த திரைப்படம் தனுஷ் நடிப்பில் வெளிவந்த பட்டாசு. சினேகாவிடம் எல்லாரும் கேட்கும் ஒரு கேள்வி எப்படி இன்னும் இளமையாகவே இருக்கிறீர்கள் என்பது தான். அதற்கு இன்னொரு சான்றாக அவர் வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது. அதில் அவர் முடி வெட்டி புது ஹேர் ஸ்டைலுக்கு மாறி இருக்கிறார். அதில் அவர் இன்னும் இளமையாக உள்ளார். அவருடைய நியூ Transformation வீடியோவை நீங்களும் காண.. Watch the Below Video…

https://www.youtube.com/watch?v=qDW_UyoIx2g

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in