The Indian Times

இன்றுடன் வெளியாகி 15ஆண்டுகளை கடந்த சுப்ரமணியபுரம் UNSEEN மேக்கிங் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகர் என கலக்கி வருபவர் சசிகுமார்.இவரது படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெறுவது குறிப்பிடத்தக்கது.இவருக்கென சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

இவர் இயக்கத்தில் வெளியாகிய சுப்ரமணியபுரம் படத்திற்கு இன்று வரை ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

Advertisement

தமிழ் சினிமாவில் பல படங்களை இயக்கியுள்ள சசிகுமார் தற்போது இயக்குனர் வேலைக்கு ஓய்வு கொடுத்துவிட்டு நடிகராக மட்டும் படங்களில் நடித்து வருகிறார்.

இவர் நடிகராக நடிக்கும் படங்களும் நல்ல வரவேற்பினை மக்களிடம் பெறுவதால் சரி இதனையே தொடர்ச்சியாக சில காலங்கள் செய்வோம் என தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

மேலும் நிறைய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.இவர் நடிப்பில் உருவாகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக காத்துகொண்டு இருக்கிறது.அண்மையில் இவருக்கு வெளியாகிய கொம்பு வச்ச சிங்கம்டா மற்றும் ராஜவம்சம் போன்ற படங்கள் மிக பெரிய தோல்வியை அளித்தன.

இருந்தும் முயற்சியை கைவிடாமல் நல்ல கதைகளை கேட்டு படம் நடித்து வருகிறார் சசிகுமார்.2008 ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியாகிய சுப்ரமணியபுரம் மாபெரும் ஹிட் அடித்தது.

இப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆகிய நிலையில் தற்போது இப்படத்தின் இதுவரை யாரும் பார்த்திடாத மேக்கிங் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in