The Indian Times

மாஸாக வெளியாகிய சூர்யா 43 படத்தின் TITLE VIDEO

பிரபல பழம்பெரும் நடிகர் சிவகுமார் அவர்களின் மகன் சூர்யா.தமிழ் சினிமாவில் உச்சத்தில் கொடிகட்டி பறக்கும் நடிகர்களில் இவர் ஒருவர். இவர் தனது நடிப்பால் பல ரசிகர்களையும் தனது வசம் இழுத்துள்ளார்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ்,மலையாள சினிமாவில் உள்ளது.தமிழ் சினிமாவில் கிடைக்கும் அதே வரவேற்பு மலையாள சினிமாவில் கிடைக்கும் நடிகர்களில் இவர் ஒருவர் .

Advertisement

நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நுழைந்தவர் சூர்யா.இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.தொடர்ந்து முயற்சி செய்து வந்த அவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் நந்தா படத்தில் நடிகர் சூர்யா நடித்து தனக்கான வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றுக்கொண்டார் .தற்போது சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் 42வது படத்தில் நடித்து இருக்கிறார்.இப்படம் 10 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.மேலும் 3டியில் இப்படம் வெளியாக உள்ளது.

Advertisement

இப்படத்தினை தொடர்ந்து சூர்யாவின் 43வது படத்தை இயக்குனர் சுதா கொங்கராவ் இயக்க உள்ளார்.இப்படத்தில் இவருடன் துல்கர் சல்மான்,நஸ்ரியா நடிக்க உள்ளனர்.2டி நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது.ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்,இப்படத்திற்கு படக்குழு புறநானுறு என பெயரிட்டுள்ளது,இந்த டைட்டில் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Embed Video Credits : 2D entertainment

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in