The Indian Times

தம்மா துண்டு ரோலுக்கு அம்மாம் பெரிய பில்டப்பு – லோகேஷை சீண்டிய மன்சூர் அலிகான்

தமிழ் சினிமாவை 90களில் மிரட்டிய பிரபல வில்லன் மன்சூர் அலிகான்.எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை சிறப்பாக செய்யக்கூடியவர் இவர்.சுபயாத்ரா என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகியவர் நடிகர் மன்சூர் அலிகான்.இப்படத்தினை தொடர்ந்து தமிழில் 1990 ஆம் ஆண்டு வெளியாகிய வேலை கிடைச்சிருச்சு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார்.

Advertisement

இவரது நடிப்பு தனி கவனத்தினை மக்களிடம் பெறவே நடிகர் விஜயகாந்த் நடிக்கும் கேப்டன் பிரபாகரன் படத்தில் வில்லன் ஆக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்தி வீரபத்திரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் அசத்தினார்.இந்த படம் இவரது சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.இதனை தொடர்ந்து வில்லனாக தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்து அசத்தினார்.

Advertisement
 

தற்போது லோகேஷ் கனகராஜின் லியோ படத்தில் நடித்துள்ளார்,அண்மையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் இயக்குனர் லோகேஷ் கனகராஜை பாலஸ்தீனத்திற்கு அழைத்துள்ளார் மேலும் 500 கோடி முதல் போட்டு படம் எடுத்து ஆயிரம் கோடிக்கு உழைக்கிறோம் ,ஆனால் அரசியல்வாதிகள் கையெழுத்து போட்டு அசால்ட்டாக பத்தாயிரம் கோடி ஆட்டையை போடுறான்,லோகேஷ் என்னை வச்சு அந்த மாதிரி அரசியல் படம் எடுக்கலாம்ல.தம்மா துண்டு ரோலுக்கு அம்மாம் பெரிய பில்டப்பு,இல்லைன்னா வாங்க பாலஸ்தீனத்துக்கு போருக்கு போகலாம்,500 மிலிட்டரி டேங்கர் கொண்டுட்டு வாங்க போருக்கு போகலாம் லோகேஷ் என கூறியுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in