The Indian Times

தலைவர்170 படப்பிடிப்பில் இணைந்த அமிதாப்பச்சன்…. தோழனுடன் இணைந்த மகிழ்ச்சியில் ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவருக்கு தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்தியா,உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.அந்தளவிற்கு தனது நடிப்பினால் மக்களை கவர்ந்துள்ளார் ரஜினி.பிறரை தட்டிக்கொடுத்து முன்னேற்றுவதில் இவரை போல சினிமாவில் யாரும் கிடையாது.குறிப்பாக சீனாவில் சூப்பர் ஸ்டாருக்கு தமிழ் சினிமாவை போல ரசிகர்கள் உள்ளனர்.

Advertisement

அபூர்வ ராகங்கள் படத்தில் இருந்து இன்று அண்ணாத்த படம் வரை இவர் செய்த சாதனைகள் பல,வாங்கிய விருதுகள் பல,ரசிகர்கள் கூட்டம் பலஇதுவே சூப்பர் ஸ்டாரின் பலம்.அன்று முதல் இன்று வரை இவருக்கான ரசிகர்கள் கூட்டம் கூடிக்கொண்டே தான் இருக்கிறது.ரஜினிகாந்த் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை திருவிழா போல அண்மையில் கொண்டாடினர். அண்ணாத்த படத்தின் தோல்விக்கு பிறகு ஜெயிலர் படத்தில் கடுமையாக உழைத்து இருக்கிறார் ரஜினிகாந்த் , அண்மையில் வெளியாகிய இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Advertisement

தற்போது இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் 170வது படத்தில் நடிக்க உள்ளார்.இப்படத்தில் இவருடன் அமிதாப்பச்சன்,ராணா,பகத் பாசில்,மானுஜு வாரியார், ரித்திகா சிங் என பலரும் நடிக்க உள்ளனர்,அனிருத் இசையில் லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது.இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்றுள்ளது.இப்படத்தின் படப்பிடிப்பில் தற்போது அமிதாப்பச்சன் கலந்துகொண்டுள்ளார்.இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in