The Indian Times

தளபதி 67 UPDATE வந்தாச்சு… லோகேஷ் சம்பவம் LOADING… ரசிகர்கள் கொண்டாட்டம்

தளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர்களில் ஒருவர்.இவர் நடித்த அனைத்து படங்களும் கோடிகளில் வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.தமிழில் மட்டும் இல்லாமல் கேரளா தெலுங்கு போன்ற சினிமாக்களிலும் இவருக்கு பெரும் வரவேற்பும் ரசிகர்கள் கூட்டமும் உள்ளது.இதுவே தளபதி விஜயின் பலம்.இவர் நடிக்கும் படங்கள் தற்போது நூறு கோடிகளுக்கு மேல் தான் வசூல்களை செய்து வருகிறது.

Advertisement

இதனாலேயே தயாரிப்பாளர்கள் தளபதி விஜயை வைத்து படம் எடுக்க வரிசையில் காத்துக்கொண்டிருக்கின்றனர்.இந்நிலையில் அண்மையில் தளபதி விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு படம் வெளியாகி உள்ளது.இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிக்கா மந்தனா நடித்துள்ளார்.தமன் இசையமைத்துள்ளார்.இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று திரையரங்குகள் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.இதுவரை உலகம் முழுவதும் இப்படம் 250 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது

Advertisement

இப்படத்தினை தொடர்ந்து இயக்குனர் லொகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தனது 67வது படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது,லோகேஷ் செல்லும் இடமெல்லாம் இப்படத்தின் அப்டேட்டை கேட்டு ரசிகர்கள் அன்பு தொந்தரவு செய்து வந்தனர்,அண்மையில் இப்படத்தின் பூஜை படப்பிடிப்புடன் தொடங்கியது,இந்நிலையில் இப்படத்தின் அப்டேட்டை தயாரிப்பு நிறுவனம்.அதன்படி தளபதி 67 படத்தினை மாஸ்டர் படத்தினை இயக்கிய லலித் குமார் இயக்க உள்ளார்,அனிருத் இப்படத்தில் இசையமைக்க உள்ளார்.DOP மனோஜ் பரஹம்சா ,சண்டை காட்சிகள் அன்பறிவு இயக்க உள்ளார். படத்தில் நடிப்பவர்கள் விபரம் விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in