The Indian Times

தவறி விழுந்த அம்மாவை தன்னை அறியாமல் ஓடிச்சென்று தாங்கிய தமிழ்… தமிழும் சரஸ்வதி ப்ரோமோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் முக்கிய தொடர் தமிழும் சரஸ்வதியும்.இந்த நாடகத்தினை மாபெரும் வெற்றியடைந்த சீரியல்கள் ஆன திருமதி செல்வம்,தெய்வமகள்,தென்றல்,நாயகி போன்ற வெற்றித்தொடர்களை இயக்கிய இயக்குனர் குமரன் இயக்குகிறார்.இதுவே இதன் வெற்றிக்கு முதல் காரணம் ஆகும்.இதில் கதாநாயகனாக பிரபல தொகுப்பாளரும் நடிகருமான தீபக் ஹீரோவாக நடித்து வருகிறார்,அதேபோல ஹீரோயினாக தொகுப்பாளினியும்,நடிகையுமான நக்ஷத்திரா நடித்து வருகிறார். இந்த நாடகத்தின் மூலம் இவர்களுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

தற்போது நாடகத்தில் தமிழ் கோதையை எதிர்த்து தேர்தலில் நிற்கிறார்.தேர்தல் முடிவுகளில் முதல் கட்ட வாக்கு எண்ணிக்கையில் தமிழை விட கோதை அதிக வாக்குகளில் முன்னிலையில் இருக்க,இறுதிக்கட்ட தேர்தல் முடிவுகளை அறிவிப்பில் தமிழ் 146 வாக்குகளை பெற்று கோதையை அதிக வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றிபெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர்,இதனால் தமிழ் தரப்பினர் பெரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

தற்போது இந்த வார ப்ரோமோ வெளியாகியுள்ளது,இதில் தமிழும் கோதையும் நிகழ்ச்சி ஒன்றில் சந்திக்கின்றனர்,அங்கு இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகின்றனர்,கோதை நிலை தடுமாறி கீழே விழும்பொழுது தமிழ் தன்னை அறியாமல் ஓடிச்சென்று தங்கியுள்ளார்,இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in