The Indian Times

யாருக்கும் தெரியாமல் கண்ணம்மா கழுத்தில் தாலிகட்ட போகும் பாரதி.. தடுத்து நிறுத்திய சௌந்தர்யா.. பாரதி கண்ணம்மா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் முக்கிய தொடர் பாரதி கண்ணம்மா.இந்த தொடருக்கு ஏகப்பட்ட குடும்ப தலைவிகள் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.காரணம் இந்த சீரியலின் கதை அந்தளவுக்கு ரசிகர்களை ஈர்த்துள்ளது.கணவனால் சந்தேகப்பட்டு குழந்தைகளுடன் கைவிடப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கையை அப்படியே தொடராக எடுத்து மக்களை கவர்ந்துள்ளதே இந்த பாரதி கண்ணம்மாவின் வெற்றிக்கு ரகசியம் என்று சொல்லலாம்.முதல் சீசன் முடிந்தது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை ஏற்படுத்தியிருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த தொடரின் இரண்டாவது பாகத்தினை எடுத்து ஒளிபரப்பி வருகிறது விஜய் தொலைக்காட்சி.இந்த பாரதி கண்ணம்மா சீசன் 2 வில் பாரதியாக ரோஜா சீரியலில் நடித்து பிரபலமாகிய சிப்பு நடித்து வருகிறார் .கண்ணம்மாவாக கண்ணம்மாவே நடித்து வருகிறார்.சித்ரா கண்ணம்மாவாக மாறி அவரது வீட்டுக்கு செல்கிறார் அங்கு பாரதியுடன் பழக்கம் ஏற்படுகிறது.நட்பு இருவருக்கும் காதலாக மாறிவிடுகிறது.

இந்த வார ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் யாருக்கும் தெரியாமல் பாரதி கண்ணம்மா கழுத்தில் தாலிகட்ட போகிறார்,இதுகுறித்து கேள்விப்பட்ட சௌந்தர்யா வெண்பாவுடன் கோவிலுக்கு சென்று கல்யாணத்தை தடுக்கிறார்,இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

Embed Video Credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in