The Indian Times

பசுபதி கதாநாயகனாக அசத்தும் “தண்டட்டி” படத்தின் ட்ரைலர் இதோ

தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை அப்படியே செய்து முடிப்பவர் பசுபதி.இவரின் நடிப்பிற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.ஹவுஸ்புல் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர் பசுபதி,இப்படத்தில் இவருக்கு எந்தவித வரவேற்பும் கிடைக்காத நிலையில் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்,அப்படி நடித்து வந்த இவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் தூள் படத்தில் வில்லன் கதாபாத்திரம்.இந்த கதாபாத்திரத்தில் நடித்து பட்டையை கிளப்பி இருந்தார் பசுபதி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

பின்னர் திருப்பாச்சி படத்தில் பட்டாசு பாலு கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்,இவரின் இந்த நடிப்புக்கு இன்றுவரை ரசிகர்கள் கூட்டம் உள்ளது.தற்போதும் படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.தற்போது இவர் இயக்குனர் ராம் சங்கையா இயக்கத்தில் தண்டட்டி படத்தில் நடித்துள்ளார்,இப்படத்தில் இவருடன் ரோகி,விவேக் பிரசன்னா மற்றும் அம்மு அபிராமி ஆகியோர் நடித்துள்ளனர்.

Advertisement

இப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.தற்போது இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.படம் வெற்றிபெற ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Embed video credits : PRINCE PICTURES

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in