முழு மிருகமாய் மாறி இருக்கும் விக்ரமின் மிருகத்தனமான தங்கலான் பட டீசர் இதோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் விக்ரம்.நடிப்பிற்காக எந்த எல்லைக்கும் செல்ல கூடியவர் இவர்.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சாதரண நடிப்பு தானே அதற்கு இத்தனை மெனக்கெடல்கள் தேவையா என்று நினைக்காமல் அந்த கதாபாத்திரமாகவே வாழ்பவர்.1990 ஆம் ஆண்டு என் காதல் கண்மணி என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் இவர்.தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும் இவருக்கான வரவேற்பு எந்த சினிமாவிலும் கிடைக்கவில்லை தமிழ் படம் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் படங்களிலும் நடித்துள்ளார்.1999 ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் சேது படத்தில் விக்ரம் நடித்தார்.இப்படத்தில் அவருடைய மொத்த உழைப்பையும் போட்டு தமிழ் சினிமாவையே அலற வைத்தார்.இப்படம் மாபெரும் வெற்றி கண்டது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  தம்மா துண்டு ரோலுக்கு அம்மாம் பெரிய பில்டப்பு - லோகேஷை சீண்டிய மன்சூர் அலிகான்

முழு மிருகமாய் மாறி இருக்கும் விக்ரமின் மிருகத்தனமான தங்கலான் பட டீசர் இதோ 1

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து இவர் ரசிகர்களால் சீயான் என செல்லமாக அழைக்கப்பட்டார்.தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் இவர்.பல நடிகர்களும் எப்படி நடிக்க வேண்டும் என்பதை விக்ரமை பார்த்து தான் கற்றுக்கொண்டதாக கூறும் அளவிற்கு நடிப்பிற்கு பெயர் போனவர்.தற்போது இவர் நடிப்பில் கோப்ரா படம் வெளியாகியது,இப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை.அதனை ஈடு செய்யும் வகையில் விக்ரமுக்கு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  வெறித்தனமாக வெளியாகியது LOKIVERSE 2.0 THEME SONG இதோ

முழு மிருகமாய் மாறி இருக்கும் விக்ரமின் மிருகத்தனமான தங்கலான் பட டீசர் இதோ 2

விளம்பரம்

இவர் தற்போது இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் தங்காலன் படத்தில் நடித்துள்ளார்.ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் மற்றும் நீலம் தயாரிப்பு நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளது.கதாநாயகிகளாக பார்வதி,மாளவிகா மோகனன் நடித்துள்ளனர்.பசுபதி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி வெளியாக உள்ளது.இப்படத்தின் டீசரை தற்போது படகுழு வெளியிட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  லியோ படத்தின் ORDINARY PERSON பாடல் வீடியோ வெளியாகியது

விளம்பரம்

Embed Video Credits : JUNGLEE MUSIC TAMIL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment