The Indian Times

காவாலா காவாலா போல மலையாளத்திலும் பட்டையை கிளப்பும் தமன்னாவின் ரக்கா ரக்கா பாடல் வீடியோ இதோ

சாந்த் சே ரோசன் செகரா என்று ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் தமன்னா.இப்படத்தினை தொடர்ந்து அடுத்ததாக தெலுங்கு படம் ஒன்றில் நடித்தார்.பின்னர் தமிழில் களம் இறங்க காத்துக்கொண்டிருந்த தமன்னாவிற்கு கேடி படத்தில் வில்லியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இந்த படத்தில் வில்லியாக நடித்து தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார்.முதல் தமிழ் படத்திலேயே தனது வில்லத்தனமான நடிப்பினை காண்பித்து தமிழில் நல்ல வரவேற்பினை பெற்றார்.இப்படத்தினை தொடர்ந்து கல்லூரி படத்திலும் நடித்தார்,வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இப்படமும் அவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.தற்போது தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.தமிழில் பல முன்னணி ஹீரோக்களுக்கும் கதாநாயகியாக நடித்து விட்டார் தமன்னா.இவருக்கென பெரும் ரசிகர்கள் தமிழ் சினிமாவில் உள்ளது.தற்போது இவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்,

Advertisement

அண்மையில் இப்பாடல் வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.காவாலா காவாலா பாடல் போல இவர் தற்போது மலையாளத்தில் நடிகர் திலீப் உடன் ரக்கா ரக்கா பாடலுக்கு குத்தாட்டம் போட்டு இருக்கிறார்.இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்ட் ஆகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.ரசிகர்கள் தமன்னாவின் நடனத்தை பெருமளவு பாராட்டி வருகின்றனர்.

Embed Video Credits : SAREGAMA MALAYALAM

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in