The Indian Times

சிங்கம் போல லியோ வெற்றிவிழாவுக்கு வருகை தந்த தளபதி விஜய் புகைப்படங்கள்

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது. தற்போது விஜய் படங்கள் என்றாலே அவை சரியாக ஓடாவிட்டாலும் பாக்ஸ் ஆபிசில் பல கோடிகளை வசூலித்து சாதனை படைத்தது வருகிறது.

இதனால் இவர் படத்தினை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். அண்மையில் இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.

Advertisement

இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியது.இருப்பினும் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை,அதே சமயம் வசூலிலும் எந்த சரிவும் இல்லை.

நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் லியோ.இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க,செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ இப்படத்தினை தயாரித்துள்ளது.

இப்படத்தில் சஞ்சய் தத்,அர்ஜுன்,த்ரிஷா,மிஸ்கின்,சாண்டி ,பிக் பாஸ் ஜனனி என பெரும் நட்சத்திரங்கள் பட்டாளங்கள் நடித்துள்ளது.

இப்படம் கடந்த வாரம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

இப்படம் வெளியாகிய 7 நாட்களில் மொத்தமாக 461 கோடியை பெற்று வசூல் சாதனை படைத்துள்ளது.இன்று இப்படத்தின் வெற்றிவிழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றுள்ளது.இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த விஜயின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in