The Indian Times

எதிரிகளால் தாக்கப்படும் அபியின் வீடு… உயிரை பணயம் வைத்து காப்பாற்றும் வெற்றி.. THENDRAL VANTHU ENNAI THODUM

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று தென்றல் வந்து என்னை தொடும்.இந்த நாடகத்தினை காண்பதற்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது அதிலும் குடும்ப தலைவிகளை அதிகம் கவர்ந்துள்ளது இந்த தொடர்,விஜய் தொலைக்காட்சியில் வெற்றித்தொடர்களாக ஓடிக்கொண்டிருக்கும் ராஜாராணி,பாரதி கண்ணம்மா,ஈரமான ரோஜாவே,மௌனராகம் போன்ற சீரியல்களில் வரிசையில் உள்ளது தான் இந்த தென்றல் வந்து என்னை தொடும் சீரியல்.இதில் வினோத் பாபு மற்றும் பவித்ரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

அபி சுடரை அழைத்துக்கொண்டு காரில் சென்றுகொண்டிருக்கும் பொழுது அபிக்கு எதிரிகள் அவரை லாரியை வைத்து அடித்து விடுகின்றனர்.இதனால் இருவரும் விபத்தில் பயங்கர காயம் அடைகின்றனர்.சுடர் விபத்தில் சிக்கியதை தெரிந்துகொண்டு வெற்றி துடித்து போகிறார்.பின்னர் மருத்துவமனையில் சுடரை சென்று பார்க்க செல்லும் பொழுது சுடர் அபியின் மகள் என தெரிகிறது,பின்னே அது தனது மகள் அல்ல அபிக்கும் வேறு ஒருவருக்கும் பிறந்த குழந்தை என தவறாக புரிந்துகொள்கிறார்.

இந்நிலையில் அபியின் எதிரிகளால் சுடருக்கு ஆபத்து இருப்பதை தெரிந்துகொண்டு சுடருக்கு பாதுகாவலர் தேடுகின்றனர்,மேலும் வெற்றியை சுடரின் பாதுகாவலராக நியமனம் செய்ய வெற்றி அபி வீட்டுக்கு வருகிறார்.இந்நிலையில் எதிரிகள் அபியின் வீட்டை கற்களால் தாக்கவே அபியும் குழந்தையும் மறைத்து கொண்டு கற்களால் அடிகளை வாங்குகிறார்.அதனை பார்த்து அபிக்கு மீண்டும் வெற்றிமேல் காதல் வருகிறது.

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in