மரகதநாணயம் பட இயக்குனர் ஆர்க் சரவணன் இயக்கம் மற்றும் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் வீரன்.இப்படத்தினை சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ளது.ஹிப் ஹாப் ஆதியே இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இரண்டு வருடங்களுக்கு பிறகு வெளியாகும் ஹிப் ஹாப் ஆதி படம் என்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகி இருந்தது.மேலும் தமிழில் வெளியாகிய சூப்பர் ஹீரோ படம் தோல்வியை சந்தித்துள்ளதால் இப்படம் வெற்றிபெற்றுள்ளதா என்பதை கீழே விமர்சனத்தில் காணலாம்
படத்தின் கதை
வீரனுரில் வாழ்ந்து வருகிறார் நம்ம ஹீரோ ஹிப் ஹாப் ஆதி,அங்கு மின்னல் தாக்கி சுயநினைவை இழக்கிறார்,இந்நிலையில் இவருக்கு எப்பொழுது வேண்டுமென்றாலும் சுயநினைவு வரலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்,இதனால் ஆதி அக்கா அவரை சிங்கப்பூர் அழைத்து செல்கிறார்,அங்கு அவருக்கு சுயநினைவு வருகிறது அதே சமயம் மின்னல் தாக்கியதில் தனக்கு சூப்பர் பவர் வந்துள்ளதும் உணர்கிறார்.நீண்ட வருடங்களுக்கு பிறகு தனது சொந்த ஊருக்கு வந்து நண்பர்களுடன் ஆடிப்பாடி விளையாடுகிறார் அதே சமயம் அந்த ஊருக்கு பிரச்சனை வில்லன் வினய் உருவத்தில் வருகிறது,வினய் கொண்டு வரும் திட்டம் ஊருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை வினய் தெரிந்துகொண்டு அதனை எவ்வாறு தடுக்கிறார் என்பதே மீதி படத்தின் கதை
படத்தின் விமர்சனம்
ஹிப் ஹாப் ஆதி மிகப்பெரிய இடைவெளிக்கு பிறகு வந்தாலும் செம்ம கம் பேக் கொடுத்துள்ளார் என்று தான் கூறவேண்டும்,குறிப்பாக சண்டை காட்சிகளில் அசத்தியெடுத்துள்ளார் ஹிப் ஹாப் ஆதி.படத்தில் கதாநாயகியாக வரும் ஆதிரா மற்றும் நண்பனாக வரும் சசியின் நடிப்பு படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.காமெடியில் முனீஸ்காந்த் மற்றும் காளிவெங்கட் காம்போ ஒர்கவுட் ஆகியுள்ளது.இயக்குனர் ஆர்க் சரவணன் எடுத்துக்கொண்ட கதைக்களத்திற்கு பெரும் பாராட்டுக்கள் என்று தான் சொல்லவேண்டும்.சாமி சூப்பர் ஹீரோவாக வந்தால் எப்படி இருக்கும் என்பதை அழகாகவும் அருமையாகவும் மக்களுக்கு எடுத்து காண்பித்துள்ளார் இயக்குனர் சரவணன்.சூப்பர் ஹீரோ ஆடை வடிவமைப்பு நன்றாக உள்ளது,படத்தின் பாடல்கள் எதுவும் ஒர்கவுட் ஆகவில்லை அதே சமயம் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.படத்தில் அனைத்தும் சரியாக இருந்தாலும் முக்கியமாக இருக்க வேண்டிய வில்லன் கதாபாத்திரம் அழுத்தம் இல்லாதது ஏமாற்றம் கொடுக்கிறது.
வீரன் படத்திற்கு தி இந்தியன் டைம்ஸ் வழங்கும் ரேட்டிங் – 3/5
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in