நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்.எந்த படத்தில் நடிக்கிறாரா அந்த படத்தின் காதாபாத்திரமாக அப்படியே மாறிவிடும் திறமை கொண்டவர் இவர்.பிற நடிகர்கள் படத்தில் நடிக்கிறார்கள் என்பது தெரியும் ஆனால் இவர் இப்படத்தின் கதாபாத்திரமாக தான் வாழ்கிறார் என்பது படம் பார்க்கும் அனைவர்க்கும் தெரிந்ததே.இவரை திரையில் ஆர்யா என்று யாரும் பார்க்கமாட்டார்கள் அந்த கதாபாத்திரமாக தான் பார்ப்பார்கள் அதுதான் இவரது பலமே..முன்னதாக இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் இவர் நடித்த திரைப்படம் சார்பட்டா பரம்பரை இந்த படம் நேரிடையாக அமேசான் ஓடிடியில் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
தற்போது தனது 34வது படத்திற்காக இயக்குனர் முத்தையா உடன் கூட்டணி அமைத்துள்ளார்.இப்படத்திற்கு காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம் என பெயரிடப்பட்டுள்ளது.இப்படத்தில் கதாநாயகியாக வெந்து தணிந்தது காடு படத்தின் கதாநாயகி சித்தி இத்தானி நடித்துள்ளார்.இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரும்ஸ்டிக் நிறுவனம் இணைந்து தயாரித்து உள்ளது.இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இப்படத்தினை பார்த்த ப்ளுசட்டை மாறன் விமர்சனம் செய்து கூறியதாவது,படத்தில் ஆர்யா எல்லாரையும் அடிக்கிறாரு,நாங்களே சீட்டுல ஒளிஞ்சு கிடந்தது தான் படம் பார்த்தோம்.படம் முழுக்க சண்டை தான் படத்துல வேற ஒண்ணுமே இல்லை,பாதி ஜனத்தொகையை இந்த படம் அழிச்சிட்டு என கூறி கலாய்த்துள்ளார்.இந்த படத்தையே நல்லா எடுத்திருக்கலாம் ஆனா எடுக்கல ,கதை குள்ள கதைய வச்சி கடைசில ஒண்ணுமே புரியல
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in