The Indian Times

மீண்டும் மீண்டும் சீண்டும் நெட்டிசன்கள் ..பாக்குறதும் பார்க்காததும் உங்க இஷ்டம்… செம அப்செட்டில் வெங்கடேஷ் பட்…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ என்றாலே காமெடி, கலாட்டா, அலப்பறைகளுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் சனி மற்றும் ஞாயிறு இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி பற்றி சொல்லவே வேண்டாம். உலகத்தில் உள்ள அனைத்து தமிழ் பேசும் மக்கள் எந்த மூலை முடுக்கில் இருந்தாலும் இந்த நிகழ்ச்சியை பார்க்காமல் இருக்க முடியாது. அந்த அளவிற்கு குக்குகள் உடன் சேர்ந்து கோமாளிகள் அடிக்கும் லூட்டிகள் வேறு லெவெலில் இருக்கும். காமெடி கலாட்டா, நட்பு, காதல் என்று எல்லா வகையான கன்டென்ட்-உம் கிடைக்கிற ஒரு இடமாக அந்த நிகழ்ச்சி இருக்க்கும் காரணத்தினால்தான் அந்த நிகழ்ச்சி இவ்வளவு வெற்றி அடைந்து இருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை.

Advertisement

தற்போது இரண்டு சீசன்கள் நடந்து முடிந்து மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் பழைய கோமாளிகளான ஷிவாங்கி, மணிமேகலை, பாலா, சக்தி, சுனிதா ஆகியோரும், புதிய கோமாளிகளாக குரேஷி, பரத், ஷீத்தல், அருண், மூக்குத்தி முருகன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். புதிய குக்குகளாக கிரேஸ் கருணாஸ், மனோ பாலா, ரோஷினி, வித்யூலேகா, சந்தோஷ் பிரதாப், அம்மு அபிராமி, ராகுல் தாத்தா, ஸ்ருதிகா மற்றும் தர்ஷன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். வெங்கடேஷ் பட் மற்றும் தாமு நடுவர்களாகவும், ரக்ஷன் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் தொடர்ந்து கொண்டு உள்ளார்கள். Youtube video code embed credits: Galatta Tamil

ஏற்கனவே செஃப் வெங்கடேஷ் பட் எல்லாரையும் அடிக்குறாரு, குறிப்பாக பரத்தை அடித்தது போன வாரம் கடும் சர்ச்சை ஆனது. இதற்கு வெங்கடேஷ் பட் விளக்கம் கொடுத்த நிலையில் மீண்டும் மற்றொரு முகநூல் கமெண்ட்டில் வெங்கடேஷ் பட் தனது சமையலைப் பற்றி கமெண்ட் அடித்தவருக்கு காட்டமான பதிலை அளித்துள்ளார். அதில் ஒருவர் இவர் நெய்யை அதிகமாக ஊற்றி சமைக்கிறார். இவர் சமைப்பதை வைத்தால் 3 நாட்களுக்கு சமைத்து விடலாம் என்று கருத்து பதிவிட்டு இருந்தார். அதற்கு சற்று காட்டமாகவே பதிலளித்துள்ள வெங்கடேஷ் பட் அவர்கள், “உங்களுக்கு பிடித்தால் பாருங்க இல்லைனா விட்டுருங்க” “உங்களுக்கு நெய் பிடிச்சா ஊத்துங்க இல்லைனா விட்டுருங்க.” நான் என்னைக்காவது உங்களை வற்புறுத்தி இருக்கேனா? என்று பதிலளித்துள்ளார். சில நாட்களாகவே வெங்கடேஷ் பட் அவர்களை சுற்றி நிறைய சர்ச்சரவு கருத்துக்கள் வந்த வண்ணம் உள்ளது. Watch the below Video..

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in