The Indian Times

வயிற்றில் உதைத்த குழந்தை..மகிழ்ச்சியில் மூழ்கிய ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் | Alya Manasa | Sanjeev

விஜய் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்று ராஜா ராணி சீரியல். இதில் ஜோடியாக நடித்த சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா இருவருமே ரசிகர்களின் மனதில் அதிகளவில் இடம் பிடித்தனர். சஞ்சீவ் கார்த்தி என்ற கதாபாத்திரத்திலும் ஆல்யா மானசா செம்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவர்கள் சீரியலில் ஜோடியாக நடித்தது மட்டுமல்லாமல் நிஜத்திலும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்தில் ஆல்யா மானசா குடும்பத்தினருக்கு சிறிதளவும் விருப்பம் இல்லை. பல எதிர்ப்புகளை தாண்டி இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

Advertisement

அந்த குழந்தைக்கு அயிலா சையத் என்று பெயர் சூட்டினர். இவரை போல் ஒரு கணவர் அமைந்திட மாட்டாரா என்று பல பெண்கள் ஏங்குகிற அளவுக்கு சஞ்சீவ் தன் காதலை வெளிப்படுத்துகிறார் என்றே கூறலாம்.இதை தொடர்ந்து சோசியல் மீடியாவில் பாசிட்டிவாக இருக்கும் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா அவ்வப்போது தங்களது குழந்தையின் வீடியோவை பதிவு செய்து வருகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் சில குறும்பு தனமான வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றனர். அவை அனைத்துமே நாள் முழுக்க பார்த்து ரசிக்கும் அளவிற்கு கொள்ளை அழகோடு அமைந்திருக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்! Youtube Video Embed Credits: Sanjeev Al

ஆல்யா தற்போது கர்ப்பமாக உள்ளார். தனது இரண்டாம் குழந்தையின் பிரசவ தேதி ஏப்ரல் கடைசி அல்லது மே முதல் வாரம் எனக்கூறி இருந்தார். பிள்ளைக்கு என்ன பெயர் வைப்பீர்கள் என்ற கேள்விக்கு குழந்தை பையனாக இருந்தால் அர்ஷ் எனவும், பெண்ணாக இருந்தால் லைலா எனவும் பெயர் வைக்க உள்ளதாக கூறியுள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆல்யாவை எட்டி உதைக்கிறது. சஞ்சீவ் ஆல்யவிற்காக சமையல் செய்து தருகிறார். இந்த வீடியோ பார்ப்பதற்கு மிக அழகாக உள்ளது. அந்த வீடியோவை நீங்களும் காண..! Watch the below video..

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in