The Indian Times

அம்மாவின் பிறந்தநாளுக்கு புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்துக்களை கூறிய விக்னேஷ் சிவன்

போடா போடி படத்தின் மூலம் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகம் ஆகியவர் விக்னேஷ் சிவன்.இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.இருப்பினும் நம்பிக்கையை தளரவிடாமல் தொடர்ந்து முயற்சி செய்து விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவை வைத்து நானும் ரவுடி தான் என்ற படத்தினை இயக்கினார்.

இந்த படம் மாபெரும் வரவேற்பினை பெற்றது.இப்படத்தினை தொடர்ந்து பல படங்களை தமிழில் இயக்கி வருகிறார்.அண்மையில் இவர் இயக்கத்தில் வெளியாகிய காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று ரூ.66 கோடி ரூபாய் வசூலையும் பெற்றது.

Advertisement

இவர் அடுத்ததாக அஜித் குமார் வைத்து லைக்கா நிறுவனம் தயாரிப்பில் புதிய படத்தினை இயக்க உள்ளார்.

இவர் கூறிய கதையில் அஜித்திற்கு லைக்கா நிறுவனத்திற்கு திருப்தி இல்லை இதனால் இப்படத்தில் இருந்து விக்னேஷ் சிவனை நீக்கி உள்ளது லைக்கா நிறுவனம்.

அஜித்தின் அடுத்த படத்தினை இயக்குனர் மகிழ் திருமேனியிடம் கொடுத்துள்ளது,இருப்பினும் விக்னேஷ் சிவன் மனம் தளராமல் தொடர்ந்து தனது அடுத்தப்படத்திற்காக வேலைகளை செய்து வருகிறார் விக்னேஷ் சிவன்.

இன்று விக்னேஷ் சிவன் தனது தாயாரின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்,மேலும் அவருடன் எடுத்த புகைப்படத்தினை பதிவிட்டு அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in