The Indian Times

மகளை தேடி உருக்கமாக பதிவிட்ட விஜய் ஆண்டனி மனைவி பாத்திமா

இசையமைப்பாளராக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்து பயணத்தினை தொடங்கியவர் விஜய் ஆண்டனி.இவர் 2005 ஆம் ஆண்டு சுக்ரன் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார்.இப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் பெருமளவு ஹிட் அடித்தது.இப்படத்தினை தொடர்ந்து ஹிட் ஆல்பங்களை இறக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்துள்ளார்.இவரது இசைக்கெனெ பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.ஆரம்ப கட்டத்தில் இசை கருவிகளை வாங்குவதற்கு காசில்லாததால் பல இசைகளை வாயிலேயே இசைத்து அந்த பாடலும் பெருமளவு ஹிட் அடித்துள்ளது.

Advertisement

இசை ஒருபக்கம் இருக்க நடிப்பினை கையிலெடுத்தார் விஜய் ஆண்டனி.இவர் 2012 ஆம் ஆண்டு வெளியாகிய நான் படத்தின் மூலம் கதாநாயகனாக களம் இறங்கினார்.இப்படம் இவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.முதல் படத்திலேயே முன்னணி நடிகராக உருவெடுத்தார் விஜய் ஆண்டனி.பல நல்ல படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து வருகிறார் விஜய் ஆண்டனி.தற்போது இவர் நடிப்பில் அக்னி சிறகுகள் மற்றும் ரத்தம் என அடுத்தடுத்து படங்கள் வெளியாக இருக்கிறது.

Advertisement

அண்மையில் விஜய் ஆண்டனி மகள் மீரா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்,இந்த செய்தி அனைவர்க்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,தற்போது விஜய் ஆண்டனி மனைவி பாத்திமா மகளை தேடி உருக்கமாக தனது எக்ஸ் தளத்தில் புதிய பதிவை வெளியிட்டுள்ளார்,அதில் அவர் கூறியதாவது, நீங்கள் 16 வருடங்கள் மட்டுமே வாழ்வீர்கள் என்று எனக்குத் தெரிந்தால்,நான் உன்னை எனக்கு மிக அருகில் வைத்திருந்தேன், சூரியனுக்கும் சந்திரனுக்கும் உன்னைக் காட்டாமல் இருந்திருப்பேன், நீ இல்லாமல் வாழ முடியாது, அம்மா அப்பாவிடம் திரும்பி வந்துவிடு. லாரா உனக்காக காத்திருக்கிறாள், என் அன்பு தங்கம் என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in