The Indian Times

ஊழல் நடக்குற இடத்துக்கு இந்த சேனாதிபதி வருவான்டா… இந்தியன் 2 டப்பிங் ஆரம்பித்தது

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசன்.இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.நடிப்பு,நடனம்,எழுத்து,இயக்கம் ,பாடல் என சினிமாவில் இருக்கும் எந்த துறையையும் இவர் விட்டுவைக்கவில்ல அனைத்திலும் தனது வெற்றிக்கொடியை நிலை நாட்டி அசத்தியவார் ,உலகநாயகன் என்ற பெயர் இவருக்கு இருந்தாலும் இவரை இவரது ரசிகர்கள் செல்லமாக ஆண்டவர் என்றுதான் அழைப்பார்கள் .அந்தளவிற்கு கமல்ஹாசன் மேல் தீராத பாசம் வைத்துள்ளனர் இவர் ரசிகர்கள்.இந்த ஆண்டு வெளியாகி தமிழ் படங்கள் ஒன்றும் தமிழகத்தில் வெற்றிபெறாமல் பிற மொழி படங்கள் மட்டுமே வெற்றிபெற்று வந்தது,

Advertisement

இந்நிலையில் உலகநாயகன் நடிப்பில் விக்ரம் வெளியாகி இந்த ஆண்டு வெளியாகிய சிறந்த தமிழ்ப்படம் என்று பெயரை பெற்று உலகம் முழுவதும் பல மொழி ரசிகர்களை கவர்ந்து வெற்றிநடைபோட்டது.விழுந்த தமிழ் சினிமாவை உலகநாயகன் தூக்கி நிலைநாட்டியுள்ளார் என்று தான் கூறவேண்டும்.இவர் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வந்தார்.அனிருத் இசையமைக்க லைக்கா நிறுவனம் தயாரிக்க படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வந்தது.இந்நிலையில் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் சிலர் உயிரிழந்ததால் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது

Advertisement

எப்போது மீண்டும் படப்பிடிப்பு துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்திருந்த நிலையில் தற்போது இன்று மீண்டும் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.படத்திற்கு மீண்டும் பூஜை போடப்பட்டு தற்போது படம் மீண்டும் உருவாக ஆரம்பித்துள்ளது,தற்போது படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பமாகியுள்ளது,இதனை வீடியோவாக வெளியிட்டுள்ளது படக்குழு.

Embed Video Credits : LYCA PRODUCTION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in