The Indian Times

BIGGBOSS ஆரவ்க்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.. மகளுடன் ஆரவ் வெளியிட்ட புகைப்படம்

பிரபல மாடல் ஆக இருந்தவர் ஆரவ்.இவருக்கு பிக் பாஸ் முதல் சீசனில் வாய்ப்பு கிடைத்தது.பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் மிகப்பிரபலம் ஆகலாம் என எண்ணி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.தன்னுடைய முழு திறமையையும் காண்பித்து பல ரசிகர்களை கவர்ந்தார் ஆரவ்.மேலும் தனது கடின உழைப்பால் 100 நாட்களுக்கு மேல் பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிக வாக்குகளை பெற்று முதல் சீசனில் டைட்டில் வின்னராகவும் மாறினார்.இவரின் வெற்றி இவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியினை அளித்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றிக்கு பிறகு ஆரவ் படங்களில் தொடர்ந்து நடிக்க தொடங்கிவிட்டார்.ஆரம்பத்தில் படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கதாநாயகனாக உருவெடுத்தார்.மார்க்கெட் ராஜா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து அசத்தினார்.ஆனால் இப்படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை,இந்நிலையில் அண்மையில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகிய கலகத்தலைவன் படத்தில் வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார்.இப்படம் இவருக்கு சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்துள்ளது என்றே கூறலாம்.

Advertisement

ஆரவ்விற்கு திருமணமாகி ஆண் குழந்தை ஒன்று உள்ளது,தற்போது இவர் மனைவி இரண்டாவதாக கர்ப்பமாக இருந்த நிலையில் இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார்.ரசிகர்களும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in