The Indian Times

புஷ்பா பட நாயகன் அல்லு அர்ஜுனின் திருமண புகைப்படங்கள்

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் ஆக வலம் வருபவர் அல்லு அர்ஜுன்.குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்குள் அறிமுகமாகி 2003 ஆம் ஆண்டு வெளியாகிய கங்கோத்ரி என்ற தெலுங்கு படத்தின் மூலம் கதாநாயகனாக சினிமாவிற்குள் நுழைந்தார்.

இதனை தொடர்ந்து தெலுங்கு படங்களில் வரிசையாக நடிக்க தொடங்கினார்.தொடர்ந்து பல வெற்றி படங்களை தெலுங்கில் கொடுத்து இன்று அசைக்க முடியாத உச்ச நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.அல்லு அர்ஜுன்.இவர் படம் வெளியாகும் நாளை இவரது ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடுவர்,

Advertisement

அந்த அளவிற்கு இவர் மீது அன்பினை வைத்துள்ளனர் என்று கூறினால் மிகையாகாது.

அண்மையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் பல மொழிகளிலும் வெளியாகிய புஷ்பா படம் சக்க போடு போட்டு வசூலை அள்ளிக்குவித்தது.இப்படம் அனைத்து மொழி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.

தற்போது பல தெலுங்கு படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் அல்லு.இதனை தொடர்ந்து கூடிய விரைவில் புஷ்பா தி ரூல் என்ற இரண்டாம் பாகத்திலும் நடிக்க உள்ளார்.

முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பு இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பினை எகிற செய்துள்ளது.

அந்த அளவிற்கு பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது இப்படம்,இந்நிலையில் கடந்த சில நாட்களாக அல்லு அர்ஜுன் நடிக்கும் விளம்பர படங்கள் சர்ச்சையை சந்தித்து வருகிறது.

Advertisement

தற்போது இவரின் திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in