The Indian Times

விக்கி உடன் ஜாலியாக வெளிநாடு TOUR கிளம்பிய நடிகை நயன்தாரா

தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் நடிகை நயன்தாரா. இப்படத்தில் நல்ல வரவேற்பினை பெற்று முதல் படத்திலேயே முன்னணி நடிகையாக உருவெடுத்தார்.தமிழ் சினிமாவில் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

தொகுப்பாளராக தான் வாழ்க்கையை தொடங்கியவர் இன்று இன்று தனது கடின உழைப்பினால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தினை மக்களிடம் வாங்கியுள்ளார்.

Advertisement

இவர் கதாநாயகியாக மட்டும் இல்லாமல் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது நடிகை நயன்தாரா தான் நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த விக்னேஷ் சிவனை கரம் பிடித்துள்ளார்,மேலும் வாடகை தாயின் மூலம் இருவரும் ஆண் குழந்தையும் பெற்றுள்ளனர்.

அண்மையில் இவர்கள் குழந்தைகளுக்கு வைத்திருக்கும் பெயரை வெளியிட்டு இருந்தனர்.

தற்போது இவருக்கு இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 75வது படமான அன்னபூரணி படம் வெளியாகி உள்ளது. அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது இவர் நடித்து வரும் மண்ணாங்கட்டி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

Advertisement

இந்நிலையில் இவர் கணவருடன் வெளிநாடு சென்ற புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in