The Indian Times

தி கிரே மேன் படத்தின் தனுஷின் கதாபாத்திரம் – கொண்டாடும் தமிழ் திரையுலகம்

நடிகர் தனுஷ் தமிழ் திரையுலகில் பல வேடங்களில் நடித்து மக்கள் மனதில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவர் தன் கடினமான உழைப்பின் மூலம் உயர்ந்து ஒரு நடிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இவர் கடின உழைப்பால் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் அளவிற்கு நடிக்கும் நடிகராக தன்னை மேம்படுத்தி கொண்டார். இதன் காரணமாக இவருக்கு உலக அளவில் இருந்தும் பல விருதுகள் வந்து கொண்டிருக்கிறது.

Advertisement

இந்த நிலையில் தற்போது ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்க உள்ளார் நடிகர் தனுஷ். அந்த படத்தின் பெயர் அனைவருக்கும் தெரிந்ததுதான் தி கிரே மேன் என்ற படம் தான். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் அமெரிக்காவில் தொடங்க உள்ளது. கிட்டத்தட்ட இரண்டு மாதம் நடைபெறும் இந்த படப்பிடிப்பு மே மாதம் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தனுஷ் மே மாதம் தான் திரும்புவார் என்று தெரிகிறது.

Advertisement

தனுஷ் ஏற்கனவே ஜர்னி ஆஃப் தி ஃபகிர் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். தற்போது ஆன்டனி, ஜோ ருஸ்ஸோ இயக்க இருக்கும் தி கிரே மேன் படம் பொதுவாக மார்க் கிரேனி எழுதிய ஆக்ஷன், திரில்லர் நாவலை கருவாக கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த படம் குறித்து மார்க் கிரேனி பல விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்த படம் கடத்தல் மற்றும் திர்லர் படம் ஆக இருக்கும் மேலும் இதில் தனுஷ் நடிப்பது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இந்த கதையில் தனுஷ் கடத்தல் கும்பலுக்கு தலைவராக இருப்பார் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் சிஐஏ அதிகாரிகளாக ரியான் கோஸ்லின் இருப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.

தென்னிந்திய நடிகர்களில் மிகவும் என்னை கவர்ந்த நடிகர் தனுஷ் தான் என்றும் நான் இதுவரை அவரிடம் பேசியது இல்லை என்றும் கூறினார். ஆனால் அவர் என்னை டிவிட்டர் பக்கத்தில் பின்தொடர்வது எனக்கு பெருமை என்றார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in