The Indian Times

குடும்பத்தோடு பொங்கல் கொண்டாட்டிய நடிகர் அருண் விஜய் புகைப்படங்கள்

பிரபல பழம்பெரும் நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா தம்பதியரின் மகன் அருண் விஜய்.

தாய் தந்தை போல சினிமாவில் எதாவது சாதிக்க வேண்டும் என 1995 ஆம் ஆண்டு முறை மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் களம் இறங்கினார்.

Advertisement

இதை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து வந்தாலும் எதிர்பார்த்த வரவேற்பு இவருக்கு சினிமாவில் கிடைக்கவில்லை.இருப்பினும் சினிமாவில் தொடர்ந்து முயற்சி செய்து வந்தார்.

இறுதியாக இவரின் முயற்சிக்கு பலனாக கவுதம் மேனன் கதையில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பதற்கு ஏதுவாக இவருக்கு என்னை அறிந்தால் படத்தில் அஜித்குமாருக்கு வில்லன் ஆக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்தி படத்தில் நடித்து அனைவரையும் நடிப்பில் மிரட்டிவிட்டார்.

இந்த படத்தில் அருண் விஜய்க்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து இவரும் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர் என்ற அந்தஸ்தினை பிடித்தார்.

அதனை தொடர்ந்து நல்ல கதைகளை கேட்டு தொடர்ந்து நடித்து வருகிறார்.அண்மையில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் இவருக்கு வெளியாகிய யானை படம் நல்ல வரவேற்பினை பெற்றது.

Advertisement

தற்போது இவர் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் விஜய் இயக்கத்தில் மிஷன் படத்தில் நடித்துள்ளார்.இப்படம் கடந்த 12ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

தற்போது நடிகர் அருண் விஜய் குடும்பத்தோடு பொங்கல் பண்டிகையை கொண்டாடியுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in