The Indian Times

wweல் கலந்துகொண்டு வீரர்களை அடித்து துவம்சம் செய்யும் நடிகர் கார்த்தி

தமிழ் சினிமாவில் பருத்திவீரன் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவையே கலக்குபவர் கார்த்தி. தனது நடிப்பினால் ஒவ்வொரு படத்திலும் ஒரு மாறுதலை காண்பித்து தனக்கென ஒரு நிரந்தர இடத்தினை தமிழ் சினிமாவில் பிடித்துவிட்டார் .இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய பொன்னியின் செல்வன் படம் மாபெரும் வரவேற்பினை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

அப்பா,அண்ணன் மூலம் சினிமா வாய்ப்பு எளிதாக கிடைத்தாலும்,தனது திறமையாலும்,கடின உழைப்பால் மட்டுமே இன்று இந்த இடத்தினை பிடித்துள்ளார்.இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் சர்தார் படத்தில் நடித்துள்ளார்.ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.படத்தில் கதாநாயகியாக ராஷி கண்ணா மற்றும் ரஜிஸா விஜயன் நடித்துள்ளனர்,இப்படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் கார்த்தி.இவருக்கு அடுத்ததாக ஜப்பான் எனும் படம் வெளியாக உள்ளது

Advertisement

தற்போது இவர் நடித்துள்ள சோனி ஸ்போர்ட்ஸ் சேனல் வீடியோ இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் கார்த்தி wwe விளையாட்டில் வரும் ஸ்காட்டிஷ் வாரியர் உடன் இணைந்து அதிரடியாக சண்டை போட்டுள்ளார்.இந்த வீடியோ கார்த்தி ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பு பெற்றுள்ளது.ரசிகர்கள் கார்த்தியின் ஆக்ஷன்களை வெகுவாக பாராட்டி வருகின்றனர்

Embed video credits : SONY SPORTS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in