The Indian Times

படம் கேவலமா இருக்கு…கதையே இல்லை…அவதார் 2 படத்தின் PUBLIC REVIEW

2009ஆம் ஆண்டு இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் எழுதி,இயக்கி,தயாரித்து,எடிட்டிங்கும் செய்து வெளியாகிய படம் அவதார்.இப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு உலகம் முழுவதும் கிடைத்தது.இப்படம் உலகம் முழுவதும் 14,000 க்கும் அதிகமான தியேட்டர்களில் 3டியில் வெளியாகியது.தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்பொழுது வரும் என எதிர்பார்த்திருந்த நிலையில் ,உலகம் முழுவதும் சுமார் 160 மொழிகளில் இப்படம் இன்று வெளியாகி மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

அவதார் முதல் பாகத்திற்கு பிறகு இரண்டாவது பாகத்தினை எடுக்க இயக்குனர் ஜேம்ஸ் 2014 ஆம் ஆண்டு திட்டமிட்டார்.ஆனால் பொருளாதார நெருக்கடிகளினால் இறுதியாக 2018ல் தான் பட வேலைகளை தொடங்கினார்.இரண்டாம் பாகத்துடன் சேர்த்து 3ஆம் பாகத்தின் சில காட்சிகளையும் எடுத்துள்ளதாகவும்,பட்ஜெட் குறைவாகியுள்ள காரணத்தினால் 3ஆம் பாகத்தின் படப்பிடிப்பை நிறுத்திவைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.மேலும் அவதார் இன்னும் பல பாகங்களாக உருவாக இருப்பதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.இது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி படத்தின் எதிர்பார்ப்பினை எகிற வைத்தது.தற்போது இன்று அதிகாலை முதல் படத்தினை ரசிகர்கள் கண்டுகளித்து வருகின்றனர்.வெளியே வரும் ரசிகர்கள் கூறுவதாவது,படம் நன்றாக இல்லை,கேவலமாக உள்ளது.கிராபிக்ஸ் மட்டும் நன்றாக உள்ளதாக தெரிவித்து வருகின்றனர்,மேலும் சிலர் படம் நன்றாக இருப்பதாகவும்,கிராபிக்ஸ் காட்சிகளுக்காகவே படத்தை பார்க்கலாம் என கூறி வருகின்றனர்.இப்படி அவதார் படம் தமிழ் படங்களை போல ரசிகர்களிடம் கலப்பு விமர்சனங்களை பெற்று வருகிறது.

Embed video credits : shruti tv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in