The Indian Times

புரட்சி தளபதி என கத்திய ரசிகரை மேடையில் மிரட்டிய நடிகர் விஷால்

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் செல்லமே படத்தில் கதாநாயகனாக நடித்து சினிமாவில் அறிமுகம் ஆகியவர் நடிகர் விஷால்.இப்படத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு தமிழ் சினிமாவில் கிடைத்தது.முதல் படமே மாபெரும் ஹிட் என்பதால் அடுத்தடுத்து தமிழில் பல படவாய்ப்புகள் விஷாலின் கதவை தட்டியது.இதன்மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை அடைந்தார். சண்டக்கோழி,திமிரு என வரிசையாக வெற்றிப்படங்களை இறக்கினார்.அறிமுகம் ஆகி முதல் மூன்று படங்களையும் ஹிட் கொடுத்த ஒரே நடிகர் விஷால். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

நடிகர்,தயாரிப்பாளர் தமிழ் சினிமாவை கலக்குபவர் விஷால் மேலும் இயக்குனராகவும் அவதாரம் எடுத்து துப்பறிவாளன் 2ஆம் பாகத்தினை இயக்கியுள்ளார்.இப்படம் விரைவில் வெளிவர உள்ளது.இதனை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மலையாளத்தில் வில்லன் படத்தில் மோகன் லாலுக்கு வில்லனாக நடித்து அசத்தினார்.கடந்த முறை வெளியாகிய வாகை சூட வா படம் நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றது.

Advertisement

தற்போது இவர் இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் லத்தி படத்தில் நடித்துள்ளார்.கதாநாயகியாக சுனைனா நடித்துள்ளார்,யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நேற்று இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.இந்த விழாவில் விஷால் மேடையில் பேசிக்கொண்டிருக்கும் பொழுது புரட்சி தளபதி என கத்திய ரசிகரை பார்த்து,தளபதி தான் ,நான் வெறும் விஷால் மட்டும் தான் ,விஜய் தான் தளபதி என கூறியுள்ளார்,இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Embed video credits : THI CINEMAS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in