The Indian Times

எம்மதமும் சம்மதம்.. காலை திருப்பதி மாலை தர்ஹா…ரசிகர்கள் பாராட்டு மழையில் சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் ரஜினிகாந்த் .இவருக்கு சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. காரணம் இந்திய சினிமாவிற்கே இவர் சூப்பர் ஸ்டார் என்பதால்.இவர் பேச்சு,நடிப்பு,ஸ்டைல் என எல்லாவற்றையும் பிரித்து ரசித்து பார்க்கும் அளவிற்கு தனக்கான ரசிகர்கள் கூட்டத்தினை கூட்டியுள்ளார்.இவர் படங்கள் வெளிநாடுகளிலும் வெளியாவதால் வெளிநாடுகளிலும் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம் உண்டு.குறிப்பாக சீனாவில் சூப்பர் ஸ்டாருக்கு தமிழ் சினிமாவை போல ரசிகர்கள் உள்ளனர். அந்தளவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மக்கள் மனதில் தனது நடிப்பு மற்றும் ஸ்டைலினால் தனி இடத்தினை பிடித்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

அபூர்வ ராகங்கள் படத்தில் இருந்து இன்று அண்ணாத்த படம் வரை இவர் செய்த சாதனைகள் பல,வாங்கிய விருதுகள் பல,ரசிகர்கள் கூட்டம் பல ,இதுவே சூப்பர் ஸ்டாரின் பலம்.அன்று முதல் இன்று வரை இவருக்கான ரசிகர்கள் கூட்டம் கூடிக்கொண்டே தான் இருக்கிறது. தற்போது ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் வெளியாகிய பாபா படத்தினை மீண்டும் வெளியிட்டுள்ளனர்.படத்தில் புதிய காட்சிகளை சேர்த்து பல காட்சிகளை கட் செய்து வெளியிட்டுள்ளனர்.ரசிகர்கள்இப்படத்தினை கண்டு களித்து வருகின்றனர்.

Advertisement

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று அதிகாலை ஆந்திராவில் மகள் ஐஸ்வர்யா உடன் இணைந்து திருப்பதி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது.தற்போது மாலை ஏஆர் ரஹ்மான் உடன் சேர்ந்து ஆந்திரா கடப்பாவில்  உள்ள தர்ஹா ஒன்றில் தரிசனம் செய்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பெருமளவு வைரலாகி வருகிறது.எம்மதமும் சம்மதம் என்ற ரஜினியின் கொள்கையை ரசிகர்கள் விமர்சையாக பாராட்டி வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in