சினிமாவில் சாதிக்க வேண்டும் என துடிப்புடன் சென்னைக்கு வரும் இளைஞர்களில் ஒருவர் தான் கவின். இவர் கஷ்டப்பட்டதற்கு பலனாக கிடைத்தது தான் கனா காணும் காலங்கள் தொடரில் வாய்ப்பு.
இதில் மாணவனாக நடித்து முதல் முறையாக தொலைக்காட்சியில் களம் இறங்கினார்.இந்த தொடருக்கு பிறகு இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகிய பீசா படத்தில் சிறிய வாய்ப்பு கிடைத்தது,
கிடைக்கும் வாய்ப்பெல்லாம் சரியாக பயன்படுத்திக்கொண்டு என்றாவது ஒருநாள் மேல வந்துவிடுவோம் என கடுமையாக உழைக்க தொடங்கினார்.
இவர் முதன் முதலாக நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தில் நடித்து சினிமாவுக்கு கதாநாயகனாக அறிமுகம் ஆகினார்.அதன்பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டையை கிளப்பினார் கவின்,
பிக் பாஸ் சீசனில் வெற்றிபெறுவார் என எதிர்பார்த்திருந்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறினார்.தற்போது இயக்குனர் கணேஷ் பாபு இயக்கத்தில் டாடா படத்தில் நடித்திருந்தார் .இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அபர்ணா தாஸ் நடித்துள்ளார்,மேலும் இவர்களுடன் பாக்யராஜ்,விடிவி கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் இவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது.தற்போது இவர் தனது நீண்ட நாள் தோழியான மோனிகாவை திருமணம் செய்துகொண்டுள்ளார்,இவரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது,ரசிகர்கள் வாழ்த்துக்களை ஜோடிகளுக்கு தெரிவித்து வருகின்றனர்
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in