The Indian Times

YOUTUBER இர்பான் வீட்டிற்கு வந்து விருந்து சாப்பிட்ட நடிகர் நெப்போலியன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் நெப்போலியன்.இவர் வெள்ளித்திரையில் எதாவது சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் வாய்ப்பு தேடி அலைந்த பொழுது திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது.

அதன்படி 1991 ஆம் ஆண்டு வெளியாகிய புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகியவர்.

Advertisement

இப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் துணை கதாபாத்திரம் மற்றும் கதாநாயகனாக நடித்து வந்தார்.கதாநாயகன் மட்டும் இல்லாமல் வில்லனாகவும் நடித்து தமிழ் சினிமாவை அசத்திவந்தார்.

இவர் வில்லனாக நடித்த எஜமான் படம் மாபெரும் வரவேற்பினை இவருக்கு சினிமாவில் பெற்றுக்கொடுத்தது.

இவர் நடித்த சீவலப்பேரி பாண்டி திரைப்படம் நல்ல வரவேற்பை மக்களிடம் பெற்று 90 களில் முன்னணி நடிகராக உருவெடுத்து தமிழ் சினிமாவை வலம் வந்தார்.

தற்போது நெப்போலியன் தமிழ் படங்களில் நடிப்பது குறைவாக உள்ளது.தனது முழு கவனத்தினையும் பிசினஸில் செலுத்தி வருகிறார்.இதனால் தற்போது அவர் குடும்பத்துடன் அமெரிக்காவில் குடிபெயர்ந்து விட்டார்.

இவர் தனது இளைய மகன் தனுஷுக்கு திருமண நிச்சயம் செய்து உள்ளார்.

Advertisement

இந்தியா வந்த அவர் யூடியூபர் இர்பான் வீட்டில் விருந்து அருந்தி உள்ளார் .

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in