BLUESATTAI மாறனுக்கு தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்த பார்த்திபன்

நடிகர் மற்றும் இயக்குனர் என தமிழ் சினிமாவில் பல திறமைகளை உள்ளடக்கியவர் பார்த்திபன்.இவர் நடிகராகவும் இயக்குனராகவும் சினிமா உலகில் சாதித்து வருகிறார்.அண்மையில் இவர் இயக்கி நடித்த ஒத்த செருப்பு படத்திற்கு தேசிய விருது கிடைத்தது.இது இவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தது.இந்த தேசிய விருது அளித்த உத்வேகத்தில் மீண்டும் அதேபோல் புதிய படத்தினை வித்தியாசமான முறையில் இயக்கியுள்ளார். மீண்டும் இவர் கதை எழுதி ஒரே ஷாட்டில் இரவின் நிழல் என்ற புதிய படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஆசிய புக் ஆப் ரெகார்டஸ் மற்றும் இந்தியன் புக் ஆப் ரெக்கார்டஸ் கிடைத்துள்ளது.

BLUESATTAI மாறனுக்கு தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்த பார்த்திபன் 1

விளம்பரம்

இவருடன் வரலட்சுமி சரத்குமார்,ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்..இப்படத்தின் முதல் பாடல் வெளியீடு விழாவில் ஏ ஆர் ரஹ்மான் உடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது திடீரென மைக்கை தூக்கி பார்த்திபன் எறிந்தது இணையத்தில் பெரும் வைரலாகியது.தற்போது இப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது.சென்னையில் இப்படம் முதல் காட்சிகள் காலை 5 மணிக்கே திரையிடப்பட்டுள்ளது.சினிமா ரசிகர்களிடம் இப்படம் நல்ல வரவேற்பினை சினிமாவில் பெற்றுள்ளது.இந்நிலையில் இப்படத்தினை விமர்சனம் செய்த விமர்சகர் ப்ளூசட்டை மாறன் பார்த்திபன் மக்களை ஏமாற்றிவிட்டார்,ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட பல படம் உள்ளது,இது உலகின் முதல் படம் இல்லை என கூறி எதிர்மறை விமர்சனம் செய்தார்.

கட்டாயம் படிக்கவும்  வியட்னாம் நாட்டில் விடுமுறையை கொண்டாடும் சீரியல் நடிகை கேபிரியல்

BLUESATTAI மாறனுக்கு தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்த பார்த்திபன் 2

விளம்பரம்

இதற்கு பார்த்திபன் தனது ஸ்டைலில் BLUESATTAI மாறனுக்கு பதில் தெரிவித்துள்ளார் ,தனது ட்வீட்டர் பக்கத்தில் இதுகுறித்து கூறியதாவது,

விமர்சனங்கள் யாவும்
விமோசனங்கள் என நான் நன்றியுடன் நெகிழ,
சனங்களோ உலக level-ல் ஒன்றென உருக,
நண்பர் blue sattai மாறன் அவர்களின்
மாறுபட்ட விமர்சனத்தையும் பார்த்து விட்டு
படம் பார்க்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
அதுசரி!
எதுசரி என விளங்க!

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  மகனுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு கிருஷ்ணர் ஜெயந்தி கொண்டாடிய இயக்குனர் செல்வராகவன்

Google-ல் அவர் சொல்லும் படம் ‘non-linear’என்ற வரிசையில் இல்லை.இன்றும். அவர் அளவுக்கு நான் அறிவுஜீவி இல்லை ! Film critic Mr saibal Chatterji உள்ளிட்ட பலரிடம் படம் காட்டி உறுதி செய்துக் கொண்டேன். குறைந்த பட்சம் ஒரு வருடமாக இப்படத்தை ‘the world’s first non-linear shot movie’ என விளம்பர படுத்தி வரும் என்னிடம் அவரே இப்படி ஒரு படம் இருப்பதாக சொல்லியிருக்கலாம். 15 தினங்களுக்கு முன் நானே அவரை தொலைப்பேசியில் spl show பார்க்க அழைத்தேன்.அப்போதாவது என்னிடம் இதை சொல்லி என்னைத் திருத்தி , மக்களை நான் ஏமாற்றுவதைத் தடுத்து ஆபத்பாந்தவனாகி இருக்கலாம். அவர் படம்(அழைத்தும் நான்) போகவில்லை என்பதென் வருத்தமே! விமர்சகர் என்பதை மீறி இயக்குனர் என்பதால் அவர் மீது இன்றும் மரியாதயே! என தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்து அசத்தியுள்ளார்

கட்டாயம் படிக்கவும்  நடிகை மேகா ஆகாஷின் திருமண நிச்சயதார்த்த புதிய புகைப்படங்கள்

BLUESATTAI மாறனுக்கு தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்த பார்த்திபன் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment