The Indian Times

அவரு என் நண்பர் தான்… பகிரங்க மன்னிப்பு கேட்ட சிவகுமார்

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர் சிவகுமார். பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்தவர் இவர்.1965 ஆம் ஆண்டு காக்கும் கரங்கள் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு முதல் முறையாக அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் வரிசையாக நடிக்க தொடங்கினார்.1967 ஆம் ஆண்டு வெளியாகிய கந்தன் கருணை படத்தில் முருகனாக நடித்து பட்டையை கிளப்பி இருந்தார்.இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உருவெடுத்தார்.இவரின் படங்களுக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இவர் தன்னை போலவே தனது மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தியை நடிகராக மாற்றியுள்ளார்.இருவரும் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்கள் ஆக வலம் வருகின்றனர்.தந்தையை போலவே சினிமாவில் வெற்றிபெற வேண்டும் என தொடர்ந்து இருவரும் போராடி வருகின்றனர்.1985 ஆம் ஆண்டு வெளியாகிய சிந்து பைரவி படத்தில் நடித்து பட்டையை கிளப்பினார்,இவரா இப்படி நடிப்பது என்று ரசிகர்களை கேள்வி கேட்கும் விதமாக நடித்து அசத்தியிருந்தார்.மேலும் சிறந்த நடிகர் என்ற பிலிம்பேர் விருதினை பல முறை வாங்கியுள்ளார்.

Advertisement

தற்போது வயது காரணமாக படங்களில் நடிப்பதை குறைத்துள்ளார்.இருப்பினும் ஆன்மிகம் மேல் அதிக நம்பிக்கை உள்ளவர் என்பதால் அடிக்கடி இவரது சொற்பொழிவினை நிகழ்ச்சிகளில் காணலாம்.அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட சிவகுமார் பழ கருப்பையா காலில் விழுந்துள்ளார். மேலும் ரசிகர் கொண்டு வந்த சால்வயை தூக்கி எறிந்துள்ளார். இது இணையத்தில் வைரல் ஆகிய நிலையில், அந்த ரசிகர் தனது நெருங்கிய நண்பர் எனவும்,தனக்கு சால்வை போடுவது பிடிக்காது என்பதால் அதனை தவிர்த்ததாகவும் மன்னிப்பு கேட்டு பேசியுள்ளார்.

Embed Video Credits : NEWS TAMIL 24X7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in