The Indian Times

53 வயதிலும் Basket Ball விளையாடி பட்டையை கிளப்பும் நடிகை மனிஷா கொய்ராலா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மனிஷா கொய்ராலா.இவர் முதன் முதலில் அறிமுகமாகிய படம் 1991 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியாகிய சௌதகர் படம் தான்,இப்படத்தினை தொடர்ந்து ஹிந்தியில் படங்கள் நடித்து பாலிவுட் சினிமாவை கலக்கினார்.

ஹிந்தியில் வரிசையாக படங்கள் கொடுத்து வந்த இவர் தமிழில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பாம்பே படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகினார்.

Advertisement

இப்படம் இவருக்கு பெரும் ஹிட்டை தமிழில் கொடுத்தது.இப்படத்தின் மூலம் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.என்னதான் தமிழில் ஹிட் கொடுத்தாலும் தொடர்ந்து ஹிந்தி படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார் மனிஷா கொய்ராலா.

இந்நிலையில் மீண்டும் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகிய இந்தியன் முதல்வன் போன்ற படங்களில் வாய்ப்பு கிடைத்தது அதனை சரியாக பயன்படுத்தி தமிழில் தொடர்ந்து ஹாட் ட்ரிக் ஹிட் கொடுத்துள்ளார்.

தொடர்ச்சியாக வெற்றிப்படங்களை கொடுத்த ஒரே நடிகை மனிஷா கொய்ராலா தான் என்று கூறினால் மிகையாகாது.

நாளடைவில் படங்களில் நடிப்பதற்கு இடைவெளி விட்டார்,புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த மனிஷா அதிலிருந்து மீண்டு வந்து தற்போது முற்றிலும் படங்களில் நடிப்பதில் இருந்து ஓய்வுபெற்றுள்ளார்.

தற்போது இவர் கூடைப்பந்து விளையாடியுள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in