The Indian Times

இன்று கோலாகலமாக நடைபெற்ற நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் திருமணம்

கல்லூரி படிக்கும் பொழுதே மாடலாக இருந்த ராகுல் ப்ரீத்தி சிங் படிப்பு முடிந்த பிறகு சினிமாவில் வாய்ப்பு தேட தொடங்கினார்.இவருக்கு முதல் வாய்ப்பே மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது.

அதன்படி 2009 ஆம் ஆண்டு கன்னடத்தில் ரீமேக் ஆகி வெளியாகிய கில்லி படத்தில் நடித்திருந்தார்.

Advertisement

இப்படம் தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகி இருந்த 7ஜி ரெயின்போ காலணி படத்தின் ரீமேக் ஆகும்.இப்படத்தில் இவருக்கு கன்னட சினிமாவில் பெரும் வரவேற்பு கிடைத்திருந்தது.

இதனை தொடர்ந்து தொடர்ச்சியாக படங்கள் நடிக்க தொடங்கிவிட்டார் ராகுல்.

இவர் தமிழில் அறிமுகம் ஆகிய படம் தடையற தாக்க.இப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து நடிகர் கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியாகிய என்னமோ ஏதோ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அசத்தினார்.

இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் பெரும் வரவேற்பினை பெற்று ரசிகர்களையும் பெற்றார்.

ஆனால் தமிழில் பட வாய்ப்புகள் சரியாக அமையாததால் மீண்டும் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி நடிக்க தொடங்கி தற்போது தெலுங்கில் மிக பெரிய நடிகையாக உருவெடுத்து அசத்தி வருகிறார்.இவர் தமிழில் இறுதியாக நடித்த படம் என்ஜி கே இதில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து அசத்தியிருப்பார்.இன்று இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in