The Indian Times

தங்கை மற்றும் மகளுடன் சேர்ந்து PARTY-யில் கலந்துகொண்ட நடிகை ஷாலினி அஜித்குமார்

நடிகர் அஜித்குமாருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களது ரசிகர்களுக்கு திருவிழா ,தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அந்தளவிற்கு அஜித் மேல் தீராத அன்பு கொண்டவர்களாக உள்ளனர் இவர்கள் ரசிகர்கள் .அண்மையில் இவரின் நடிப்பில் வெளியாகிய வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது .வசூலிலும் சாதனை படைத்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.தற்போது அஜித் மீண்டும் இயக்குனர் வினோத் இயக்கத்தில்,போனிகபூர் தயாரிப்பில் மூன்றாவது முறையாக இவர் நடித்த துணிவு படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Advertisement

நடிகர் அஜித் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இவருக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.அஜித் குடும்பத்துடன் அடிக்கடி வெளிநாடு செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.மேலும் ஷாலினியும் அடிக்கடி மகன் மற்றும் மகன்கள் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்,இந்த புகைப்படங்களும் வைரலாகி வருகிறது

Advertisement

தற்போது ஷாலினி மகள் மற்றும் தங்கையுடன் பார்ட்டிக்கு சென்றுள்ளார்,அப்பொழுது எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் அஜித் பொண்ணா இது அடையாளமே தெரியலையே என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in