தான் பேசக்கூடாது தனது படம் தான் பேசவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர் இயக்குனர் மாரிசெல்வராஜ்.இவரின் இயக்கத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது என்று கூறலாம்.தனது இயக்கத்தின் மூலம் பல உண்மை சம்பவங்களை மக்களுக்கு எடுத்துரைத்துள்ளார் இவர்.ஆரம்பத்தில் ஜாதி ரீதியாக படம் எடுக்கிறார் என்று இவருக்கு எதிராக குற்றசாட்டுகள் வைக்கப்பட்டாலும் ஜாதியினால் ஏற்படும் விளைவுகளை மட்டுமே அவர் தனது படத்தில் உணர்த்தியிருப்பார்.இதனாலேயே இவரது இயக்கத்திற்கு இத்தகைய ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது.
சினிமா மேல் ஆசை ஆனால் கற்று தர ஆள் இல்லை தேடி அலைந்த மாரி செல்வராஜுக்கு வந்தது அதிர்ஷடம் இயக்குனர் ராம் வடிவில்,மாரியின் ஆர்வத்தை பார்த்து அவரை துணை இயக்குனராக சேர்த்துக்கொண்டார்,தனது எல்லா வித்தைகளையும் தனது சிஷியனுக்கு சொல்லி கொடுத்தார் ராம்.இப்படி படிப்படியாக வளர்ந்து இன்று பெரும் படங்களை இயக்கம் அளவிற்கு உருவெடுத்துள்ளார் மாரி செல்வராஜ்
தற்போது இவர் நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியாகிய லியோ படத்தை பாராட்டி பேசியிருந்தார்,இது ரசிகர்களிடம் இவர் மேல் செம்ம கடுப்பினை ஏற்படுத்தி இருக்கிறது.படத்தில் மிஸ்கின் கதாபாத்திரம் பன்றிகளை கொல்வது போல் அமைந்திருக்கும் அதே சமயம் மாரி செல்வராஜின் மாமன்னன் படத்தில் பன்றிகளை வளர்ப்பதை காண்பித்துள்ளார் மேலும் அதன் மேல் கைவைத்தவுடன் ஹீரோ உதயநிதி கோவத்தில் வெடிப்பது போலவும் கதைக்களம் அமைத்திருப்பார்,இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு சிலர் இவர் எப்படி லியோ படத்தை பாராட்டலாம் என்பது போல கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in