The Indian Times

நடிகர் மற்றும் இயக்குனர் பாக்கியராஜ் வீட்டு நவராத்ரி விழா கொண்டாட்டம்

இயக்குனர் பாரதிராஜாவிடம் துணை இயக்குனராக பணிபுரிந்து இயக்குனராக அறிமுகமாகி பின்னர் நடிகராக விஸ்வரூபம் எடுத்தவர் பாக்கியராஜ்.

பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவில் கொடுத்து நடிகர் மற்றும் இயக்குனர் என இரண்டிலும் கொடிகட்டி பறந்தவர் இவர்,16வயதினிலே என்ற படத்தின் மூலம் நடிகராக பாக்கியராஜ் களம் இறங்கினார்.

Advertisement

1979 ஆம் ஆண்டு சுவரில்லாத சித்திரங்கள் என்ற படத்தினை இயக்கி இயக்குனராக அறிமுகம் ஆகினார்.

இவர் இயக்கி நடித்த முந்தானை முடிச்சு திரைப்படம் பெரும் வரவேற்பினை பெற்றது.இப்படத்தின் மூலம் முன்னணி இயக்குனர் மற்றும் நடிகர் என்ற அந்தஸ்தினை அடைந்தார் பாக்யராஜ்.

இவர் நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவரது மகன் சாந்தனு.சிறுவயதில் இருந்தே படங்கள் நடித்து வந்தாலும் தந்தையை போல சினிமாவில் இதுவரை அவர் உயரவில்லை.தற்போது பாக்யராஜ் படங்களில் மட்டும் நடித்து வருகிறார்

தற்போது இவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜ் வீட்டில் நவராத்திரியை கொண்டாடியுள்ளார்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in