The Indian Times

நடிகை ஷாலினி தங்கை ஷாம்லியின் அழகிய புகைப்படங்கள்

பிரபல நடிகை ஷாலினி அஜித் குமாரின் தங்கை ஷாம்லி,இவர் 1989 ஆம் ஆண்டு ராஜநடை என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தார்.

இப்படத்தினை தொடர்ந்து மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகிய அஞ்சலி படத்தில் நல்ல வரவேற்ப்பினை பெற்று இருந்தார்

Advertisement

இவர் பல தமிழ் படங்களில் தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தி வந்தார்.இறுதியாக இவருக்கு கதாநாயகி வாய்ப்பு கிடைத்தது.2009 ஆம் ஆண்டு ஒய் என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆகி இருந்தார்.

இப்படத்திற்கு பிறகு தமிழில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக வீர சிவாஜி படத்தில் நடித்து அசத்தியிருந்தார்.2016ஆம் ஆண்டு வெளியாகிய இப்படம் இவருக்கான வரவேற்பினை பெற்றுக்கொடுக்கவில்லை

இவர் தமிழில் மட்டுமில்லாமல்,கன்னடம்,தெலுங்கு ,மலையாளம் மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது இவர் ஓவியம் வரைந்து சாதனை படைத்தது வருகிறார், அண்மையில் இவர் தான் வரைந்த ஓவியங்களை காட்சி படுத்தியிருந்தார்

தற்போது இவர் வரைந்த ஓவியங்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in