The Indian Times

நடிகை அம்பிகா உடன் ஊர் சுற்றிய WEEKEND கொண்டாடிய அருவி சீரியல் நடிகைகள் புகைப்படங்கள் இதோ

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று அருவி,இந்த சீரியலுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகை அம்பிகா நடித்து வருகிறார்.

மேலும் கதாநாயகியாக நடிகர் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா லிவிங்ஸ்டன் நடித்து வருகிறார்.ஜோவிதா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ‘பூவே உனக்காக’ என்ற தொடரில் கதாநாயகி பூவரசி என்ற கேரக்டருக்கு தோழியாக கீர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

பின்னர் உயர்படிப்புக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால் தற்போது அந்த சீரியலில் இருந்து வெளியேறினார்.பின்னர் மீண்டும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அருவி நாடகத்தில் நடித்து வருகிறார்.

இவருக்கு இந்த நாடகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இதனால் தொடர்ந்து நாடகத்தில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்

Advertisement

மேலும் இதில் பல சின்னத்திரை நடிகர்கள் நடித்து வருகின்றனர்,இந்நிலையில் நடிகை அம்பிகா மற்றும் சின்னத்திரை நடிகர்கள் அனைவரும் வெளியே சென்று மகிழ்ந்துள்ளனர்.

வெளியே சென்ற இவர்கள் ஐஸ்க்ரீம் சாப்பிட்டு சினிமாவிற்கு சென்று அன்றைய நாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர்.

இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை அம்பிகா வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in