The Indian Times

BUTTERFLY போல வந்து அனைவரின் இதயத்தையும் திருடிய அதிதி ஷங்கர்

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர்.குறைந்த அளவே படங்கள் இயக்கி இருந்தாலும் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார்.காரணம் இவர் படத்தில் உள்ள கதையும் அதில் இருக்கும் பிரம்மாண்டமும் தான்.பல முன்னணி நடிகர்களும் இவர் நடிப்பில் ஒருமுறையாவது நடித்துவிடமாட்டோமா என ஏங்கி வருகின்றனர்.தற்போது இயக்குனர் சங்கர் தெலுங்கில் ராம் சரணை வைத்து ஆர்சி 15 என்ற படத்தினை இயக்கி வருகிறார்.இப்படத்தின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஷங்கர் இயக்கத்தில் உருவாக்கிய எந்திரன்,2.0 போன்ற படங்கள் எல்லாம் மாபெரும் வரவேற்பினையும் வசூலையும் தமிழ் சினிமாவுக்கு பெற்று கொடுத்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவரது மகளை தற்போது படத்தில் அறிமுகம் செய்துள்ளார்.நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் விருமன் படத்தின் மூலம் அதிதிசங்கர் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாக உள்ளார்.அண்மையில் இப்படத்தில் இருந்து கஞ்சா பூவே கண்ணழகி எனும் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.சூரி நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதிதியின் முதல் படம் என்பதால் அதனை காண இயக்குனர் ஷங்கரும் ஆவலாக உள்ளார்.

Advertisement

அண்மையில் விருமன் படத்தின் ட்ரைலர் மற்றும் இசைவெளியீட்டு விழா பிரம்மாண்டமாக மதுரையில் நடைபெற்றது.தற்போது அதிதி சங்கர் வண்ணத்துப்பூச்சி போல உடையணிந்து சுற்றி வந்து வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்.படம் வெளியாவதற்கு முன்னரே இவ்வளவு பெரிய ரசிகர்கள் கூட்டம் கூடியது தமிழ் சினிமாவிலேயே இவருக்காகத்தான் இருக்கும்.அப்பாவை போலவே பாடல் நடிப்பு என ஐவரும் பிரம்மாண்டமாக தான் உள்ளார்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in