The Indian Times

யுவன் மற்றும் HIPHOP ஆதி இணைந்து ஆடியும் பாடியும் வெளுத்த தியாகி BOYS பாடல் ப்ரோமோ

யுவன் சங்கர் ராஜா சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அரவிந்தன் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகியவர் யுவன்.இப்படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் படங்களுக்கு இசையமைக்க தொடங்கினார்.இந்த பாடல்கள் எல்லாம் ஹிட் அடித்தது.தொடர்ந்து ஹிட் பாடல்களை வரிசையாக கொடுத்து முன்னணி இசையமைப்பாளர் என்ற அந்தஸ்தினை பெற்றுள்ளார்.புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பதை போல இளையராஜா தனது இசையால் எப்படி மக்களை அன்று கட்டிபோட்டாரோ அதேபோல் தற்போது அவரது மகன் யுவன் சங்கர் ராஜா கட்டிபோட்டுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

சோகமாக இருந்தாலும் .சந்தோசமாக இருந்தாலும் யுவனின் இசை நம்மளை சொர்க்கத்திற்கே கொண்டு செல்லும் அந்த அளவிற்கு உள்ளது அவரது இசை.இவர் இசைக்கு பல திரைபிரபலங்கள் கூட இவருக்கு ரசிகராக உள்ளனர்.தளபதி விஜயின் மகன் கூட யுவன் சங்கர் ராஜாவின் பெரிய ரசிகர் தான். இத்தகைய பெரிய ரசிகர் வட்டத்தினை கொண்டவர்.தற்போது பல படங்களுக்கும் தொடர்ந்து பாடல்களை இசையமைத்து அசத்தி வருகிறார்.அண்மையில் இவர் இசையில் வெளியான வலிமை படத்தில் அம்மா பாடல் பெரும் ஹிட் அடித்தது.தற்போது யுவன் சங்கர் ராஜா வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

இந்நிலையில் நடிகர் சுந்தர் சி இயக்கும் காபி வித் காதல் படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.இப்படத்தில் தியாகி என்ற பாடலை ஹிப் ஹாப் ஆதியுடன் இணைந்து ஆடி பாடி உருவாக்கியுள்ளார்.தற்போது இந்த பாடலின் ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.இதனை பார்த்த இவர்களது ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றுள்ளனர்.மேலும் தனி தனியாக சேர்ந்தாலே இருவரும் அலற விடுவார்கள் தற்போது ஒன்றாக இணைந்து பாடல் பாடியுள்ளனர் அப்போ பாடல் வேற லெவெலில் தான் இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Embed video credits : U1 records

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in