The Indian Times

எனக்கு அடிபட்டருக்குனு காட்டி காசு வாங்க மாட்டேன்..அஜித்தை தாக்கினாரா உலகநாயகன்

கமல்ஹாசன். இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது நடித்திருக்கும் திரைப்படம் விக்ரம்.இப்படத்தினை இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.அனிருத் இசையமைத்துள்ளார்.படத்தினை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ளது.இப்படத்தில் இவருடன் பகத் பாசில்,விஜய் சேதுபதி,காளிதாஸ் ஜெயராம் மற்றும் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படம் கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது.வசூலில் பெரும் சாதனைகளை அள்ளி குவித்தது என்று தான் கூற வேண்டும்.தமிழ் சினிமா தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நிலையில் விக்ரம் அதனை முறியடித்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தமிழகத்தில் பாகுபலி வசூல் சாதனையை குறைந்த நாட்களிலேயே முறியடித்து மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார் கமல்ஹாசன்.நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த வெற்றி என்பதால் கமல்ஹாசன் உச்ச மகிழ்ச்சியில் உள்ளார்.மேலும் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு கார் பரிசாக வழங்கியுள்ளார்.அதேபோல் துணை இயக்குனர்கள் 13 பேருக்கு பைக்குகளை பரிசாக வழங்கியுள்ளார்.நடிகர் சூர்யாவிற்கு ரோலெக்ஸ் வாட்சினை அன்பளிப்பாக கொடுத்துள்ளார்.அண்மையில் சில தினங்களுக்கு முன்னர் விக்ரம் 50வது நாளை கொண்டாடும் வகையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.

Advertisement

அந்த பேட்டியில் அவர் கூறியதாவது,படம் நடிக்கும் பொழுது எனக்கு வியர்வை வந்ததுன்னு சொல்ல முடியுமா,ஆடியன்ஸ் பாக்கும் பொழுது என் கால் ஒடஞ்சி இருந்தாலும் நான் நல்லா டான்ஸ் ஆடணும் அதான் முக்கியம் ,கோவில் வாசலில் இருக்கும் பிச்சைக்காரன் மாறி என் புண்ணை காட்டி காசு வாங்க மாட்டேன்,என் திறமையை காட்டி காசு வாங்குவேன் என கூறியுள்ளார்.இதனால் அஜித்தை தான் கமல் கூறியுள்ளதாக அஜித் ரசிகர்கள் கமல்ஹாசன் மேல் கடுப்பாகியுள்ளனர்.ஏனெனில் வலிமை படத்தில் அஜித் விழுந்த காட்சிகளை படக்குழு வெளியிட்டிருந்தது,இதனால் கமல்ஹாசன் அஜித்தை மறைமுகமாக தாக்கியதாக கூறப்படுகிறது

Embed video credits : Galatta plus

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in