The Indian Times

மீண்டும் முன்னணி இயக்குனர் படத்திலிருந்து கழட்டி விடப்பட்ட அனிருத்! சோகத்தில் ரசிகர்கள்.

தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத். தற்போது வெளிவரும் முக்காவாசி படங்களில் அனிருத் தான் இசையமைத்து கொண்டு வருகிறார். தனுஷ் நடித்த 3 படத்தில் இசையமைப்பாளராய் தன் திரை பயணத்தை ஆரம்பித்த அனிருத் , இன்று தன திறமையால் எட்டமுடியாத அளவிற்கு உயர்ந்திருக்கிறார். இவரது முதல் படம் 3 இல் இருந்து இப்போது வெளியான மாஸ்டர் திரைப்படம் வரை இவரது பாடல்கள் தோல்வி அடைந்ததே கிடையாது. தமிழ் சினிமாவின் பிஜிஎம் கிங் என்றால் சந்தேகமே கிடையாது அது அனிருத் மட்டுமே.

Advertisement

அனிருத் பிஜிஎம் ற்கு எந்த நடிகர் நடந்து வந்தாலும் அது மாஸாக தான் இருக்கும். இந்நிலையில் தற்போது இரண்டு பெரிய இயக்குனர்கள் அனிருத்தை தங்களின் படத்தில் இருந்து விளக்கி விட்டனர். இதை அறிந்த அனிருத் ரசிகர்கள் சற்று குழப்பத்திற்குள்ளாகி இருக்கின்றனர். விகாரம் தற்போது கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் நடித்து வரும் சியான் 60 படத்திற்கு முதலில் அனிருத் தான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் நேற்று சியான் 60 படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க போவதாக அதிகாரபூர்வ தகவல் வெளியானது. இது ரசிகர்களுக்கு மிக பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

Advertisement

தற்போது மீண்டும் ஒரு பெரிய இயக்குனர் அனிருத்தை தன படத்திலிருந்து விளக்கியுள்ளார். ஷங்கர் ராம் சரண் னை வைத்து இயக்க இருக்கும் படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கப் போவதாக கூறப்பட்டது. அனால் தற்போது அனிருத் விளக்கப்பட்டு ஏ. ஆர். ரகுமான் ஒப்பந்தமாகி உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் கார்த்திக் சுப்ராஜ் அனிருத்தை விளக்கியதை தொடர்ந்து தற்போது ஷங்கரும் அனிருத்தை ஓரங்கட்டி உள்ளார். இந்த சம்பவம் கோலிவுட் வட்டாரத்தையே அனிருத் மேல் சந்தேகப்பட வைத்துள்ளது.

அனிருத் கைவசம் நிறைய படங்கள் இருப்பதால் தாமதம் செய்கிறார் என்ற காரணமாக இருக்குமோ என்று சிலர் கூறி வருகின்றனர். எது எப்படியானாலும் இந்த சம்பவம் அனிருத் ரசிகர்களை சோகத்திற்குள்ளாக்கியுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in