தளபதி 65 படத்தின் புதிய அப்டேட்! கால்ஷீட் கொடுத்த பூஜா ஹெக்டே.

கோலிவுட்டில் தற்போது டாப்பில் வசூல் சக்கரவர்த்தியாக இருக்கும் நடிகர் தளபதி விஜய். பல விமர்சனங்களுக்கு மத்தியில் திரைத்துறையில் நுழைந்திருந்தாலும், தற்போது இவர் தொட்ட படமெல்லாம் மெகா ஹிட்டாகி வசூலை குவிக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. கடைசியாக விஜய் நடித்து பொங்கல் விருந்தாக வெளி வந்த திரைப்படம் மாஸ்டர். மாஸ்டரின் வசூல் சாதனை பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. இந்நிலையில் தற்போது விஜய் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்க இருக்கிறார்.

கட்டாயம் படிக்கவும்  மலையாள புத்தாண்டை கொண்டாடிய சித்தா பட நாயகி நிமிஷா

தளபதி 65 படத்தின் புதிய அப்டேட்! கால்ஷீட் கொடுத்த பூஜா ஹெக்டே. 1

விளம்பரம்

நெல்சன் திலீப்குமார் இயக்கிய கோலமாவு கோகிலா வெற்றி படமாக அமைந்தது. அதன் பிறகு தற்போது சிவகார்த்திகேயனை வைத்து இயக்கியுள்ள டாக்டர் திரைப்படம் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் தற்போது இவர் தளபதி 65 படத்தில் ஆர்வம் காட்டி வருகிறன்றார். இந்த படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதம் முதல் ரஷ்யாவில் துவங்க இருக்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதன் அடிப்படையில் நெல்சன் ஷூட்டிங் லொகேஷன் காக ரஷ்யா சென்றுள்ளார். தற்போது இந்த படத்திற்கு பூஜா ஹெக்டே தான் ஹெரோஇனே என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  தெலுங்கு வருடப்பிறப்பை வீட்டில் கொண்டாடிய BIGGBOSS சுஜா வருணே

தளபதி 65 படத்தின் புதிய அப்டேட்! கால்ஷீட் கொடுத்த பூஜா ஹெக்டே. 2

விளம்பரம்

இருப்பினும் இவர் தான் இந்த படத்தின் நாயகி என்ற அதிகாரபூர்வ தகவல் ஏதும் படக்குழுவினரிடமிருந்து வரவில்லை. ஆனால் மற்றொரு தகவல் கிடைத்துள்ளது என்னவென்றால் பூஜா ஹெக்டே இந்த படத்தில் நடிப்பதற்காக 3.5 கோடி சம்பளம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்காக 50 நாட்களுக்கு மேல் கால்ஷீட் கொடுத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. விஜய் இந்த படத்திற்கு 60 முதல் 70 நாட்கள் வரை கால்ஷீட் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. எது எப்படி ஆனாலும் , விஜய் நடித்தாலே அந்த படம் வெற்றி தான் என்று இருக்கும் வேளையில் இந்த படத்தின் மேல் உள்ள எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கின்றது என்றே கூறலாம்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment