The Indian Times

Hiphop ஆதி நடிக்கும் அன்பறிவு படத்தின் first look

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி இன்று கதாநாயகனாக இளைஞர்கள் ரசிகர் கூட்டத்தை சேர்த்து வைத்துள்ளனர் ஹிப்ஹாப் ஆதி. ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஹிப்ஹாப் தமிழா ஆதி. அதன் பின்னர் , இன்று நேற்று நாளை , தனி ஒருவன் , கத்தி சண்டை அரண்மனை 2 என அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தது.

Advertisement

அதுவரை இசையமைப்பாளராக இருந்த ஆதி , முதல் முதலில் மீசைய முறுக்கு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்தை தன் வாழ்க்கையோடு ஒப்பிட்டு அவரே இயக்கியிருப்பார். அதை தொடர்ந்து நட்பே துணை , நான் சிரித்தால் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார் ஹிப்ஹாப் ஆதி. இந்நிலையில் தற்போது அன்பறிவு என்ற படத்தில் நடித்துள்ளார் ஆதி. இந்த படத்தில் காஷ்மீரா இவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

Advertisement

இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்க இயக்குனர் அஸ்வின் ராம் இயக்கியுள்ளார். இதை தொடர்ந்து இந்த படத்தில் நெப்போலியன் , ஊர்வசி போன்ற திரைபபலன்களும் நடித்துள்ளனர் என்று கூற்றப்படுகிறது. தற்போது இந்த படத்தின் first look ரிலீஸ் ஆகி வைரலாகி வருகிறது.

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in