The Indian Times

நடிகர் விவேக்கின் அறியாத உண்மை , கண்கலங்கிய நடிகர் குமரிமுத்து!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடியனாக இருந்தவர் நடிகர் விவேக். இவருக்கு “சின்னக்கலைவாணர்”என்று மற்றொரு பெயரும் இருக்கிறது. ஒரு காலத்தில் காமெடி என்றாலே செந்தில் கவுண்டமணி தான் ஞாபகத்திற்கு வருவார்கள். அவர்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் அந்த இடத்தை நிரம்பியவர் விவேக். காமெடி செய்தாலும் அதில் சமூக கருத்தையும் கலந்து செய்பவர் இவர்.

Advertisement

தமிழ் சினிமாவின் அணைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்த பெருமை விவேக்கிற்கு உண்டு. விவேக் சூப்பர் ஸ்டார் ரஜினி போல் ஸ்டைல் செய்து சில வீடியோக்களை பதிப்விட்டுளார். இவருக்கு மரம் நடுவதில் ஆர்வம் அதிகம் , நடிகர் மட்டுமல்லாது இளைஞர்களுக்கு சிறந்த உதாரணமாகவும் திகழ்ந்தவர் விவேக். இவரது பணியை ஊக்குவிக்கும் விதமாக இந்திய அரசு இவருக்கு ‘பத்ம ஸ்ரீ விருது’ என்ற விருதை இவருக்கு கொடுத்து கெளரவித்தது. இவர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமில்லாது சமூக அக்கறை கொண்ட நல்ல மனிதரும் கூட.

Advertisement

இந்நிலையில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நகைச்சுவை நடிகர் குமரிமுத்து, நடிகர் விவேக் பற்றி யாரும் அறியாத ஒரு உண்மையை பகிர்ந்து கொண்டார். தன் மகளின் கல்யாணத்துக்காக இரண்டு லட்சம் கொடுத்தார் என்று கண்கலங்கி கூறியுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா ஒரு நல்ல நடிகரை மட்டுமல்ல ஒரு மாமனாதரையும் இழந்துவிட்டது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in